• Dec 09 2024

யாழில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவன் உள்ளிட்ட இருவர் காயம்...!

Sharmi / Jul 6th 2024, 12:23 pm
image

யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள்- துவிச்சக்கர வண்டி விபத்தில் சிறுவன் ஒருவன் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.

சம்பவம் குறித்த மேலும் தெரியவருவதாவது,

பாடசாலை நிறைவடைந்து தனது தாயாரின் சகோதரியின் மகனை ஏற்றிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தவேளை வீதியில் சென்றுகொண்டிருந்த துவிச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிளுடன் மோதியதிலேயே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.

இதில் பாடசாலை மாணவன் மற்றும் அவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்ற இருவரும் காயமடைந்துள்ளனர். 

இவர்களை மீட்ட அருகிலுள்ளவர்கள் உடனடியாக மருதங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.


யாழில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவன் உள்ளிட்ட இருவர் காயம். யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள்- துவிச்சக்கர வண்டி விபத்தில் சிறுவன் ஒருவன் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.சம்பவம் குறித்த மேலும் தெரியவருவதாவது,பாடசாலை நிறைவடைந்து தனது தாயாரின் சகோதரியின் மகனை ஏற்றிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தவேளை வீதியில் சென்றுகொண்டிருந்த துவிச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிளுடன் மோதியதிலேயே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.இதில் பாடசாலை மாணவன் மற்றும் அவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்ற இருவரும் காயமடைந்துள்ளனர். இவர்களை மீட்ட அருகிலுள்ளவர்கள் உடனடியாக மருதங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இது தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement