• Dec 08 2024

யாழின் முக்கிய பகுதியில் வாளுடன் இளைஞன் கைது...!

Sharmi / Jul 6th 2024, 12:09 pm
image

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகைத்திடல் கிராமத்தில் வாளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம்  குறித்து மேலும் தெரியவருவதாவது

வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகைக்திடல் கிராமத்தில் பல்வேறு வாள்வெட்டு சம்பவங்கள், மக்களை அச்சுறுத்துதல் உட்பட பல்வேறு சம்பவங்களுடன்  தொடர்புடைய இளைஞர் ஒருவர் பொலிஸாருக்கு டிமிக்கி விட்டு  வந்த நிலையில் நேற்று(05) பிற்பகல் வேளை அவரது வீட்டில் வைத்து மருதங்கேணி பொலீஸாரால் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த இளைஞனுக்கு நீதிமன்றங்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவும்  பலர் மீது  வாளால் வெட்டியமை, அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட  குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர் என்றும் போலீஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், குறித்த சந்தேக நபர் வெவ்வேறு இடங்களில் தலைமறைவாக வசித்து வந்த நிலையில் நேற்று பிற்பகல் தனது தாயார் வீட்டிற்கு வந்திறங்கி சில நிமிடங்களில் மருதங்கேணி போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட   இளைஞனிடம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வரும் மருதங்கேணி போலீசார் ,விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

யாழின் முக்கிய பகுதியில் வாளுடன் இளைஞன் கைது. யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகைத்திடல் கிராமத்தில் வாளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவம்  குறித்து மேலும் தெரியவருவதாவதுவடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகைக்திடல் கிராமத்தில் பல்வேறு வாள்வெட்டு சம்பவங்கள், மக்களை அச்சுறுத்துதல் உட்பட பல்வேறு சம்பவங்களுடன்  தொடர்புடைய இளைஞர் ஒருவர் பொலிஸாருக்கு டிமிக்கி விட்டு  வந்த நிலையில் நேற்று(05) பிற்பகல் வேளை அவரது வீட்டில் வைத்து மருதங்கேணி பொலீஸாரால் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞனுக்கு நீதிமன்றங்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவும்  பலர் மீது  வாளால் வெட்டியமை, அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட  குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர் என்றும் போலீஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில், குறித்த சந்தேக நபர் வெவ்வேறு இடங்களில் தலைமறைவாக வசித்து வந்த நிலையில் நேற்று பிற்பகல் தனது தாயார் வீட்டிற்கு வந்திறங்கி சில நிமிடங்களில் மருதங்கேணி போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்ட   இளைஞனிடம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வரும் மருதங்கேணி போலீசார் ,விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement