• Feb 09 2025

அனுமதிப்பத்திரமின்றி கடத்த முற்பட்ட உலர்ந்த இஞ்சி மூடைகளுடன் இருவர் கைது

Tharmini / Feb 8th 2025, 4:42 pm
image

அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக இஞ்சி கடத்தப்படுவதாக கற்பிட்டி பொலிஸ் விஷேட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய நுரைச்சோலைப் பொலிஸாருடன் இனைந்து நேற்று கற்பிட்டி பாலாவி பிரதான வீதியின் தழுவ பகுதியில் வேனொன்ற மறித்து சோதனைக்கு உற்படுத்தப்படுத்தியுள்ளனர்.

இதன்போது 10 மூடைகளில் 400 கிலோ கிராம் உலர்ந்த இஞ்சி இருந்தமைக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த இஞ்சி மூடைகள் நுரைச்சோலை தழுவ பகுதியிலிருந்து கண்டிக்கு கடத்தமுற்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 34 மற்றும் 42 வயதுடைய இருவரும் கண்டியைச் சேர்ந்தவர்கள் எனவும் இதன்போது பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் இஞ்சி மூடைகள் கடத்தலுக்கு பயன்படுத்திய வேன் ஆகியவற்றை கட்டுநாயக்க சுங்கத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க உள்ளதாக நுரைச்சோலைப் பொலிஸார் இதன்போது தெரிவித்தனர்.




அனுமதிப்பத்திரமின்றி கடத்த முற்பட்ட உலர்ந்த இஞ்சி மூடைகளுடன் இருவர் கைது அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக இஞ்சி கடத்தப்படுவதாக கற்பிட்டி பொலிஸ் விஷேட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய நுரைச்சோலைப் பொலிஸாருடன் இனைந்து நேற்று கற்பிட்டி பாலாவி பிரதான வீதியின் தழுவ பகுதியில் வேனொன்ற மறித்து சோதனைக்கு உற்படுத்தப்படுத்தியுள்ளனர்.இதன்போது 10 மூடைகளில் 400 கிலோ கிராம் உலர்ந்த இஞ்சி இருந்தமைக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.குறித்த இஞ்சி மூடைகள் நுரைச்சோலை தழுவ பகுதியிலிருந்து கண்டிக்கு கடத்தமுற்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 34 மற்றும் 42 வயதுடைய இருவரும் கண்டியைச் சேர்ந்தவர்கள் எனவும் இதன்போது பொலிஸார் தெரிவித்தனர்.இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் இஞ்சி மூடைகள் கடத்தலுக்கு பயன்படுத்திய வேன் ஆகியவற்றை கட்டுநாயக்க சுங்கத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க உள்ளதாக நுரைச்சோலைப் பொலிஸார் இதன்போது தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement