• Feb 08 2025

அரசின் உத்தரவாத விலைக்கு நெல் வழங்க முடியாது - விவசாயிகள் திட்டவட்டம்

Chithra / Feb 8th 2025, 4:41 pm
image

 

நெல் விலையுடன் ஒப்பிடுகையில் அரிசி விலைகள் அதிகரிக்கும் அபாயம் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் தாவரவியல் தொடர்பான சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மாரம்பே தெரிவித்துள்ளார். 

நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்தார். 

பெரும்போக நெல் அறுவடை நடவடிக்கைகள் தொடங்கிய பின்னணியில், அரசாங்கம் நெல்லுக்கான உத்தரவாத விலையை அறிவித்தது. 

கடந்த 6 ஆம் திகதி முதல் நெல் அறுவடைக்காக அரசு நெல் களஞ்சிய சாலைகள் திறக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் ஆணைக்குழு அறிவித்தபோதிலும், இன்றும் விவசாயிகள் அந்தக் களஞ்சிய சாலைகளுக்கு நெல்லைக் கொண்டு வரவில்லை.

அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட உத்தரவாத விலையில் நெல் வழங்க நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என்று பொலன்னறுவை பிரதேச விவசாயிகள் குழு ஒன்று தெரிவித்துள்ளது. 


அரசின் உத்தரவாத விலைக்கு நெல் வழங்க முடியாது - விவசாயிகள் திட்டவட்டம்  நெல் விலையுடன் ஒப்பிடுகையில் அரிசி விலைகள் அதிகரிக்கும் அபாயம் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் தாவரவியல் தொடர்பான சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மாரம்பே தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்தார். பெரும்போக நெல் அறுவடை நடவடிக்கைகள் தொடங்கிய பின்னணியில், அரசாங்கம் நெல்லுக்கான உத்தரவாத விலையை அறிவித்தது. கடந்த 6 ஆம் திகதி முதல் நெல் அறுவடைக்காக அரசு நெல் களஞ்சிய சாலைகள் திறக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் ஆணைக்குழு அறிவித்தபோதிலும், இன்றும் விவசாயிகள் அந்தக் களஞ்சிய சாலைகளுக்கு நெல்லைக் கொண்டு வரவில்லை.அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட உத்தரவாத விலையில் நெல் வழங்க நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என்று பொலன்னறுவை பிரதேச விவசாயிகள் குழு ஒன்று தெரிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement