• Oct 18 2024

கடலில் மூழ்கி இரு மாணவர்கள் பலி - தமிழர் பகுதியில் சோகம்..! samugammedia

Chithra / May 7th 2023, 12:34 pm
image

Advertisement

மட்டக்களப்பு சவுக்கடி பகுதியில் கடலில் நீராடச் சென்ற இரு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

பிரத்தியேக வகுப்பு ஒன்றிற்கு செல்வதாக வீட்டிலிருந்து சென்ற மாணவர்கள் இருவரே இன்று காலை மட்டக்களப்பு சவுக்கடி கடற்கரை பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.


இவ்வருடம் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றுவிக்க உள்ள மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கொக்குவில் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் கறுப்பங்கேணியை சேர்ந்த டானியல் றோகித் (16வயது), இருதயபுரத்தினை சேர்ந்த நிரோசன் பிரவீன் (16வயது) ஆகியோர் என உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


நேற்று மாலை இவர்கள் வீட்டிலிருந்துவந்து குறித்த கடற்பகுதியில் குளித்துக்கொண்டிருக்கும்போது அலையில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மரண விசாரணையை தொடர்ந்த சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைகளுக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளது.


குறித்த இளைஞர்கள் மரணமான மட்டக்களப்பில் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கடலில் மூழ்கி இரு மாணவர்கள் பலி - தமிழர் பகுதியில் சோகம். samugammedia மட்டக்களப்பு சவுக்கடி பகுதியில் கடலில் நீராடச் சென்ற இரு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.பிரத்தியேக வகுப்பு ஒன்றிற்கு செல்வதாக வீட்டிலிருந்து சென்ற மாணவர்கள் இருவரே இன்று காலை மட்டக்களப்பு சவுக்கடி கடற்கரை பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.இவ்வருடம் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றுவிக்க உள்ள மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கொக்குவில் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவர்கள் கறுப்பங்கேணியை சேர்ந்த டானியல் றோகித் (16வயது), இருதயபுரத்தினை சேர்ந்த நிரோசன் பிரவீன் (16வயது) ஆகியோர் என உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.நேற்று மாலை இவர்கள் வீட்டிலிருந்துவந்து குறித்த கடற்பகுதியில் குளித்துக்கொண்டிருக்கும்போது அலையில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.மரண விசாரணையை தொடர்ந்த சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைகளுக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளது.குறித்த இளைஞர்கள் மரணமான மட்டக்களப்பில் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement