• Jan 11 2025

வெளிநாடு செல்ல முயற்சித்த இரு தமிழர்கள் கைது..!

Sharmi / Jan 1st 2025, 9:26 am
image

போலியான கடவுச்சீட்டை பயன்படுத்தி வெளிநாடு செல்ல முயற்சித்த இரு தமிழர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

39 மற்றும் 40 வயதுடைய இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போலியான  இலங்கை கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி நேபாளத்தின் காத்மாண்டு செல்ல முயற்சித்த வேளையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேபாளத்தின் காத்மாண்டுக்கு புறப்படவிருந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானமான ஏஐ-282இல் செல்வதற்காக இருவரும் விமான நிலையம் சென்றுள்ளனர்.

எனினும் அவர்களின் கடவுச்சீட்டில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக விசாரணை மேற்கொண்ட போது அது போலியானது என அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்நிலையில், அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.



வெளிநாடு செல்ல முயற்சித்த இரு தமிழர்கள் கைது. போலியான கடவுச்சீட்டை பயன்படுத்தி வெளிநாடு செல்ல முயற்சித்த இரு தமிழர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.39 மற்றும் 40 வயதுடைய இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.போலியான  இலங்கை கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி நேபாளத்தின் காத்மாண்டு செல்ல முயற்சித்த வேளையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேபாளத்தின் காத்மாண்டுக்கு புறப்படவிருந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானமான ஏஐ-282இல் செல்வதற்காக இருவரும் விமான நிலையம் சென்றுள்ளனர்.எனினும் அவர்களின் கடவுச்சீட்டில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக விசாரணை மேற்கொண்ட போது அது போலியானது என அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.இந்நிலையில், அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement