• May 07 2025

நுவரெலியாவில் அரிசியை அதிக விலைக்கு விற்ற இரண்டு வர்த்தகருக்கு 2 இலட்சம் அபராதம்

Thansita / Feb 20th 2025, 5:31 pm
image

நுவரெலியாவில் கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக அரிசி விற்பனை செய்த இரண்டு கடைகளுக்கு நுவரெலியா நீதவான் நீதிமன்றம் இரண்டு இலட்சம் ரூபா அபராதம் விதித்துள்ளதுஇச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில் 

அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த ஹவாஎலியா மற்றும் கந்தபொல பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர்கள் இருவர்,உற்பட  13 பேர்  நுவரெலியாவில் கைது  செய்யப்பட்டதாக நுவரெலியா மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் சிரேஷ்ட்ட விசாரணை அதிகாரி திரு. அமில ரத்நாயக்க தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில்

அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த 02 பேருக்கும்,  தலா இரண்டு லட்சம் ரூபாய் , குற்றத்தை ஒப்புக்கொண்ட 13 பேருக்கும். 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விசாரணை அதிகாரிகள் எஸ். எம். ரஸ்லான், எம்.சி.டி. திஸாநாயக்க இந்த முறைப்பாடுகளை நீதிமன்றில் முன்வைக்க நடவடிக்கை  எடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது

நுவரெலியாவில் அரிசியை அதிக விலைக்கு விற்ற இரண்டு வர்த்தகருக்கு 2 இலட்சம் அபராதம் நுவரெலியாவில் கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக அரிசி விற்பனை செய்த இரண்டு கடைகளுக்கு நுவரெலியா நீதவான் நீதிமன்றம் இரண்டு இலட்சம் ரூபா அபராதம் விதித்துள்ளதுஇச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில் அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த ஹவாஎலியா மற்றும் கந்தபொல பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர்கள் இருவர்,உற்பட  13 பேர்  நுவரெலியாவில் கைது  செய்யப்பட்டதாக நுவரெலியா மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் சிரேஷ்ட்ட விசாரணை அதிகாரி திரு. அமில ரத்நாயக்க தெரிவித்தார்.கைது செய்யப்பட்டவர்களை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில்அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த 02 பேருக்கும்,  தலா இரண்டு லட்சம் ரூபாய் , குற்றத்தை ஒப்புக்கொண்ட 13 பேருக்கும். 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.நுவரெலியா நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விசாரணை அதிகாரிகள் எஸ். எம். ரஸ்லான், எம்.சி.டி. திஸாநாயக்க இந்த முறைப்பாடுகளை நீதிமன்றில் முன்வைக்க நடவடிக்கை  எடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement

Buy Now