• Aug 13 2026

தொண்டமாநகரில் இரு பாரவூர்திகள் மோதி கோர விபத்து; யாழ். இளைஞன் பலி!

Chithra / Aug 12th 2026, 9:36 am
image


கிளிநொச்சி A9 வீதியின் தொண்டமாநகர் பகுதியில் இன்று (12) அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பொருட்களை ஏற்றிச் சென்ற இரண்டு பாரவூர்திகள் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற பாரவூர்தி தொண்டமாநகர் பகுதியில் வீதியோரமாக நிறுத்தப்பட்டு பொருட்களை இறக்குவதற்கு முற்பட்டிருந்த நிலையில், அதே திசையில் பின்னால் பயணித்த மற்றுமொரு பாரவூர்தி அதன்மீது மோதியுள்ளது.


இந்த விபத்தில் பாரவூர்தியின் சாரதி உதவியாளராகப் பணியாற்றிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 21 வயதுடைய சத்தியராசா சஞ்சயன் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.


மேலும், 28 வயதுடைய பாரவூர்தியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தொண்டமாநகரில் இரு பாரவூர்திகள் மோதி கோர விபத்து; யாழ். இளைஞன் பலி கிளிநொச்சி A9 வீதியின் தொண்டமாநகர் பகுதியில் இன்று (12) அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பொருட்களை ஏற்றிச் சென்ற இரண்டு பாரவூர்திகள் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற பாரவூர்தி தொண்டமாநகர் பகுதியில் வீதியோரமாக நிறுத்தப்பட்டு பொருட்களை இறக்குவதற்கு முற்பட்டிருந்த நிலையில், அதே திசையில் பின்னால் பயணித்த மற்றுமொரு பாரவூர்தி அதன்மீது மோதியுள்ளது.இந்த விபத்தில் பாரவூர்தியின் சாரதி உதவியாளராகப் பணியாற்றிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 21 வயதுடைய சத்தியராசா சஞ்சயன் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.மேலும், 28 வயதுடைய பாரவூர்தியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement