• Nov 02 2024

இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு- சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது! samugammedia

Tamil nila / Jun 13th 2023, 11:00 pm
image

Advertisement

பிரித்தானியாவில் நோட்டிங்ஹாம் நகரில் இடம்பெற்ற சம்பவத்தில் இறந்த நபர்களில் இருவர் நோட்டிங்ஹாம் பல்கலைக்கழக மாணவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை நோட்டிங்ஹாம் நகரத்தில் நடந்த ஒரு சம்பவத்தின் போது மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.00 மணியளவில் இல்கேஸ்டன் வீதிக்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர். அங்கு இருவரின் சடலங்களை பொலிஸார் கண்டனர். மெக்தலா வீpதியிலும் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து  பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நகர மையத்தில் ஒரே இரவில் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து எங்கள் மாணவர்கள் இருவர் எதிர்பாராத விதமாகவும் உயிரிழந்ததை மிகுந்த வருத்தத்துடன் உறுதிப்படுத்துகிறோம்.

இந்தச் செய்தியால் நாங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளோம், பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எமது ஆதரவை தெரிவித்துகொள்கின்றோம்.

“இது எங்கள் சமூகத்தில் உள்ள ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் துன்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை நாங்கள் அறிவோம்..” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு- சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது samugammedia பிரித்தானியாவில் நோட்டிங்ஹாம் நகரில் இடம்பெற்ற சம்பவத்தில் இறந்த நபர்களில் இருவர் நோட்டிங்ஹாம் பல்கலைக்கழக மாணவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இன்று அதிகாலை நோட்டிங்ஹாம் நகரத்தில் நடந்த ஒரு சம்பவத்தின் போது மூன்று பேர் கொல்லப்பட்டனர்.உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.00 மணியளவில் இல்கேஸ்டன் வீதிக்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர். அங்கு இருவரின் சடலங்களை பொலிஸார் கண்டனர். மெக்தலா வீpதியிலும் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டது.இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து  பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,நகர மையத்தில் ஒரே இரவில் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து எங்கள் மாணவர்கள் இருவர் எதிர்பாராத விதமாகவும் உயிரிழந்ததை மிகுந்த வருத்தத்துடன் உறுதிப்படுத்துகிறோம்.இந்தச் செய்தியால் நாங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளோம், பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எமது ஆதரவை தெரிவித்துகொள்கின்றோம்.“இது எங்கள் சமூகத்தில் உள்ள ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் துன்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை நாங்கள் அறிவோம்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement