• Sep 21 2024

ஐ.நா. உயர்ஸ்தானிகரின் அறிக்கை மனவேதனையை தருகின்றது - சி.வி.விக்னேஸ்வரன்..! samugammedia

Tamil nila / Jun 25th 2023, 5:59 pm
image

Advertisement

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து 14ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் வடக்கு கிழக்கிலுள்ள படையினர் வெளியேற்றப்படவில்லை என்ற விடயம் அறிக்கையில் இடம்பெறவில்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக பொறுப்புக்கூறலை தவிர்ப்பதனால் அது இலங்கைக்கு ஒரு சிவப்பு எச்சரிக்கையாக அமைந்துள்ளதாக ஐ.நா. உயர்ஸ்தானிகர் அறிவித்துள்ள வாய்மூல அறிக்கை தொடர்பாக தமிழ் தலைவர்கள் வரவேற்றுள்ள நிலையில் சி.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு சுட்டிக்காட்டியிருந்தார்.

ஐ.நா. உயர்ஸ்தானிகரின் வாய்மூலமான அறிக்கையானது, பொருளாதார ரீதியில் நெருக்கடிகளை சந்தித்துள்ள மக்களை மேலும் துன்புறத்தாமல், நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

 அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் கட்சிகளுடன் முன்னெடுத்துள்ள பேச்சுவார்த்தையும் வரவேற்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக, ஜனாதிபதி எம்முடனான பேச்சுவார்த்தையின்போது, அரச திணைக்களங்களினால் அபகரிக்கப்படும் காணிகள் பற்றி கரிசனை செலுத்தியிருந்தார்.

அடுத்து, பொறுப்புக்கூறல் விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பொறுப்புக்கூறல் செய்யப்படாமல் எவ்விதமான எதிர்கால முன்னேற்றங்களையும் காணமுடியாது என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 

அவ்வாறு பொறுப்புக்கூறல் நீதியாக முன்னெடுக்கப்பட வேண்டுமாயின், சுயாதீனமான விசாரணையொன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும்.

அதேநேரம், இந்த வாய்மொழி அறிக்கையில் போர் நிறைவுக்கு வந்து 14 ஆண்டுகளாகின்றபோதும், 

வடக்கு, கிழக்கில் உள்ள படையினர் வெளியேற்றப்படவில்லை என்ற விடயத்தினை சுட்டிக்காட்டியிருக்கலாம். ஆனால், அந்த விடயம் உள்ளீர்க்கப்படவில்லை.

எஞ்சியுள்ள அரசியல் கைதிகளுக்கான விடுதலையையும் அழுத்தமாக கூறியிருக்கலாம். ஆனால், அவ்விடயங்கள் கூறப்படாமை மனவருத்தத்தினை தருவதாக சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.



ஐ.நா. உயர்ஸ்தானிகரின் அறிக்கை மனவேதனையை தருகின்றது - சி.வி.விக்னேஸ்வரன். samugammedia இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து 14ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் வடக்கு கிழக்கிலுள்ள படையினர் வெளியேற்றப்படவில்லை என்ற விடயம் அறிக்கையில் இடம்பெறவில்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக பொறுப்புக்கூறலை தவிர்ப்பதனால் அது இலங்கைக்கு ஒரு சிவப்பு எச்சரிக்கையாக அமைந்துள்ளதாக ஐ.நா. உயர்ஸ்தானிகர் அறிவித்துள்ள வாய்மூல அறிக்கை தொடர்பாக தமிழ் தலைவர்கள் வரவேற்றுள்ள நிலையில் சி.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு சுட்டிக்காட்டியிருந்தார்.ஐ.நா. உயர்ஸ்தானிகரின் வாய்மூலமான அறிக்கையானது, பொருளாதார ரீதியில் நெருக்கடிகளை சந்தித்துள்ள மக்களை மேலும் துன்புறத்தாமல், நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் கட்சிகளுடன் முன்னெடுத்துள்ள பேச்சுவார்த்தையும் வரவேற்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஜனாதிபதி எம்முடனான பேச்சுவார்த்தையின்போது, அரச திணைக்களங்களினால் அபகரிக்கப்படும் காணிகள் பற்றி கரிசனை செலுத்தியிருந்தார்.அடுத்து, பொறுப்புக்கூறல் விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பொறுப்புக்கூறல் செய்யப்படாமல் எவ்விதமான எதிர்கால முன்னேற்றங்களையும் காணமுடியாது என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு பொறுப்புக்கூறல் நீதியாக முன்னெடுக்கப்பட வேண்டுமாயின், சுயாதீனமான விசாரணையொன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும்.அதேநேரம், இந்த வாய்மொழி அறிக்கையில் போர் நிறைவுக்கு வந்து 14 ஆண்டுகளாகின்றபோதும், வடக்கு, கிழக்கில் உள்ள படையினர் வெளியேற்றப்படவில்லை என்ற விடயத்தினை சுட்டிக்காட்டியிருக்கலாம். ஆனால், அந்த விடயம் உள்ளீர்க்கப்படவில்லை.எஞ்சியுள்ள அரசியல் கைதிகளுக்கான விடுதலையையும் அழுத்தமாக கூறியிருக்கலாம். ஆனால், அவ்விடயங்கள் கூறப்படாமை மனவருத்தத்தினை தருவதாக சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement