• May 03 2025

வடக்கில் உரிமை கோரப்படாத காணிகள் கபளீகரம்: யாழில் சட்ட ஆலோசனை..!

Sharmi / May 2nd 2025, 9:50 pm
image

வடபகுதியில் ஐயாயிரத்து தொள்ளாயிரத்து நாற்பது ஏக்கர் காணியினை  கபளீகரம்  செய்யப்படுவதை தடுத்து நிறுத்தும் முகமாக இலவச சட்ட ஆலோசனை வழங்கும் நிகழ்வு வெற்றிலைக்கேணியில்   இன்று (02)  ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தலைமையில் இடம்பெற்றது.

கடந்த 28. 03. 2025  திகதி இடப்பட்ட வர்த்தமானியிலே மேற்படி ஏக்கர் காணியினை மூன்று மாதத்திற்குள் உரிமை கோரப்படாதவிடத்தில் அரச காணியாக  அபகரிக்கப்படுமென  தெரிவிக்கப்பட்டிருந்தது.

யாழ். மாவட்டத்திலே 3669 ஏக்கர் காணி கபளீகரம் செய்யப்படவுள்ளதாகவும் இது வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவுக்குள் அடங்குவதனால் மக்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கவும் , எதிர் மனு விண்ணப்பம் முழுமைப்படுத்தும் வேலைத்திட்டத்தையும் சட்டத்தரணிகள் குழாம் முன்னெடுத்திருந்தது.

இதில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் , சட்டத்தரணி கேசவன் சயந்தன் உள்ளிட்ட பத்து வரையான சட்டத்தரணிகள் கலந்துகொண்டு மக்களுக்கான ஆலோசனைகளை வழங்கினார்கள்.

இந் நிகழ்வு வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெற்றிலைக்கேணியில் இடம்பெற்றது.

இவ் ஏற்பாடுகளை முன்னாள்  வட மாகாண சபை  உறுப்பினர் எஸ்.சுகிர்தன் முன்னெடுத்திருந்தார்.


வடக்கில் உரிமை கோரப்படாத காணிகள் கபளீகரம்: யாழில் சட்ட ஆலோசனை. வடபகுதியில் ஐயாயிரத்து தொள்ளாயிரத்து நாற்பது ஏக்கர் காணியினை  கபளீகரம்  செய்யப்படுவதை தடுத்து நிறுத்தும் முகமாக இலவச சட்ட ஆலோசனை வழங்கும் நிகழ்வு வெற்றிலைக்கேணியில்   இன்று (02)  ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தலைமையில் இடம்பெற்றது.கடந்த 28. 03. 2025  திகதி இடப்பட்ட வர்த்தமானியிலே மேற்படி ஏக்கர் காணியினை மூன்று மாதத்திற்குள் உரிமை கோரப்படாதவிடத்தில் அரச காணியாக  அபகரிக்கப்படுமென  தெரிவிக்கப்பட்டிருந்தது.யாழ். மாவட்டத்திலே 3669 ஏக்கர் காணி கபளீகரம் செய்யப்படவுள்ளதாகவும் இது வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவுக்குள் அடங்குவதனால் மக்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கவும் , எதிர் மனு விண்ணப்பம் முழுமைப்படுத்தும் வேலைத்திட்டத்தையும் சட்டத்தரணிகள் குழாம் முன்னெடுத்திருந்தது.இதில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் , சட்டத்தரணி கேசவன் சயந்தன் உள்ளிட்ட பத்து வரையான சட்டத்தரணிகள் கலந்துகொண்டு மக்களுக்கான ஆலோசனைகளை வழங்கினார்கள்.இந் நிகழ்வு வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெற்றிலைக்கேணியில் இடம்பெற்றது.இவ் ஏற்பாடுகளை முன்னாள்  வட மாகாண சபை  உறுப்பினர் எஸ்.சுகிர்தன் முன்னெடுத்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement