• Nov 23 2024

அரசியல்வாதிகளின் சகவாசத்தில் இயங்கும் பாதாள உலகத்தினர்..! – மகாநாயக்க தேரர் குற்றச்சாட்டு

Chithra / Jan 30th 2024, 9:20 am
image

 

பாதாள உலகம் உட்பட பல்வேறு சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடும் பலர், அரசியல்வாதிகளின் சகவாசத்தில் இருப்பதால் அவர்களின் சமூக விரோதச் செயல்கள் தொடர்பான பொறுப்பில் இருந்து அரசியல்வாதிகளை விடுவிக்க முடியாது என அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்கர் வண. வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர்  தெரிவித்துள்ளார்.

நேற்று (29) கண்டி, பொல்கொல்ல பிரதேசத்திலுள்ள அறநெறி  பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பாடசாலை புத்தகங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மகாநாயக்க தேரர்  மேற்கண்டவாறு தெரிவித்தார் 

நாட்டை போதைப்பொருளில் இருந்து விடுவிப்பதற்காக  பொது பாதுகாப்பு அமைச்சர்  திரன் அலஸ் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் விசேட அக்கறையுடன் செயற்பட்டு வருவதாகவும், 

அதனை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அனைவரினதும் ஆதரவும்  அவர்களுக்கு  தேவை எனவும்   அவர் வலியுறுத்தினார்.

சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் சமயக் கல்வி கற்காதவர்களும், துறவிகளின் சகவாசம்  பெறாதவர்களுமே ஆவார்.

இன்று வாரத்திற்கு  இருமுறைகளை மாத்திரமே   பாடசாலைகளில் பௌத்தம் கற்பிக்கப்படுகின்றது.

பெற்றோர்கள் தமது பிள்ளைகளை  அறநெறி பாடசாலைகளுக்கு அனுப்புவதில் ஆர்வம் காட்ட வேண்டும் எனவும்  அவர் மேலும்  தெரிவித்தார். 

 

அரசியல்வாதிகளின் சகவாசத்தில் இயங்கும் பாதாள உலகத்தினர். – மகாநாயக்க தேரர் குற்றச்சாட்டு  பாதாள உலகம் உட்பட பல்வேறு சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடும் பலர், அரசியல்வாதிகளின் சகவாசத்தில் இருப்பதால் அவர்களின் சமூக விரோதச் செயல்கள் தொடர்பான பொறுப்பில் இருந்து அரசியல்வாதிகளை விடுவிக்க முடியாது என அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்கர் வண. வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர்  தெரிவித்துள்ளார்.நேற்று (29) கண்டி, பொல்கொல்ல பிரதேசத்திலுள்ள அறநெறி  பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பாடசாலை புத்தகங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மகாநாயக்க தேரர்  மேற்கண்டவாறு தெரிவித்தார் நாட்டை போதைப்பொருளில் இருந்து விடுவிப்பதற்காக  பொது பாதுகாப்பு அமைச்சர்  திரன் அலஸ் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் விசேட அக்கறையுடன் செயற்பட்டு வருவதாகவும், அதனை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அனைவரினதும் ஆதரவும்  அவர்களுக்கு  தேவை எனவும்   அவர் வலியுறுத்தினார்.சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் சமயக் கல்வி கற்காதவர்களும், துறவிகளின் சகவாசம்  பெறாதவர்களுமே ஆவார்.இன்று வாரத்திற்கு  இருமுறைகளை மாத்திரமே   பாடசாலைகளில் பௌத்தம் கற்பிக்கப்படுகின்றது.பெற்றோர்கள் தமது பிள்ளைகளை  அறநெறி பாடசாலைகளுக்கு அனுப்புவதில் ஆர்வம் காட்ட வேண்டும் எனவும்  அவர் மேலும்  தெரிவித்தார்.  

Advertisement

Advertisement

Advertisement