கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த சீக்ரகாமி ரயில் மோதி இனந்தெரியாத நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் பிலிமத்தலாவை மற்றும் மித்தெனிய ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 35 வயதுடைய 06 அடி 04 அங்குல உயரமும் ஊதா நிற காற்சட்டை, சாம்பல் நிற சேர்ட் அணிந்த ஆணொருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சடலமானது பேராதனை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,
மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
பதுளை நோக்கி பயணித்த ரயில் மோதி இனந்தெரியாத நபர் உயிரிழப்பு கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த சீக்ரகாமி ரயில் மோதி இனந்தெரியாத நபரொருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் பிலிமத்தலாவை மற்றும் மித்தெனிய ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவர் 35 வயதுடைய 06 அடி 04 அங்குல உயரமும் ஊதா நிற காற்சட்டை, சாம்பல் நிற சேர்ட் அணிந்த ஆணொருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும், சடலமானது பேராதனை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.