• Nov 23 2024

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் அரச சேவை சங்கங்களின் ஒன்றியம் அதிருப்தி...!

Sharmi / Jul 3rd 2024, 12:17 pm
image

அரச மற்றும் மாகாண அரச சேவைகளின் நிறைவேற்று அதிகாரிகளுக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ள 25,000 ரூபா கொடுப்பனவை அரச மற்றும் மாகாண அரச சேவைகள் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் தர வேறுபாடின்றி வழங்குமாறு அரச சேவை சங்கங்களின்  ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த காலங்களில் மத்திய வங்கி ஊழியர்கள் மற்றும் நிறைவேற்று அதிகாரிகளின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்ட போதிலும், அரச சேவையின் கீழ் சேவையாளர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் கடந்த காலங்களில் அதிகரிக்கப்படவில்லை என கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் தம்மிக்க  முனசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், அரச சேவை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பாக கடந்த காலங்களில் இவ்விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாட சந்தர்ப்பம் பெற்றுக் கொள்ள முயற்சித்ததாகவும் ஆனால் அதிகாரிகள் கலந்துரையாடல் கூட வழங்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக சம்பள அதிகரிப்பு கோருவதற்கு தயக்கம் காட்டினாலும் தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதன் அடிப்படையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், தபால் ஊழியர்கள் மற்றும் அலுவலக உதவி சேவையாளர்கள் ஆகியோர் இந்த இரண்டு நாட்களிலும் சேவையை விட்டு வெளியேறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 


அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் அரச சேவை சங்கங்களின் ஒன்றியம் அதிருப்தி. அரச மற்றும் மாகாண அரச சேவைகளின் நிறைவேற்று அதிகாரிகளுக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ள 25,000 ரூபா கொடுப்பனவை அரச மற்றும் மாகாண அரச சேவைகள் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் தர வேறுபாடின்றி வழங்குமாறு அரச சேவை சங்கங்களின்  ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.கடந்த காலங்களில் மத்திய வங்கி ஊழியர்கள் மற்றும் நிறைவேற்று அதிகாரிகளின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்ட போதிலும், அரச சேவையின் கீழ் சேவையாளர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் கடந்த காலங்களில் அதிகரிக்கப்படவில்லை என கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் தம்மிக்க  முனசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.அத்துடன், அரச சேவை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பாக கடந்த காலங்களில் இவ்விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாட சந்தர்ப்பம் பெற்றுக் கொள்ள முயற்சித்ததாகவும் ஆனால் அதிகாரிகள் கலந்துரையாடல் கூட வழங்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இதன்காரணமாக சம்பள அதிகரிப்பு கோருவதற்கு தயக்கம் காட்டினாலும் தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதன் அடிப்படையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், தபால் ஊழியர்கள் மற்றும் அலுவலக உதவி சேவையாளர்கள் ஆகியோர் இந்த இரண்டு நாட்களிலும் சேவையை விட்டு வெளியேறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement