• Sep 21 2024

ஒரு குடையின் கீழ் ஒன்றுபடுங்கள் - பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வாருங்கள்! - சுரேஸ் அழைப்பு

Chithra / Jan 12th 2023, 3:36 pm
image

Advertisement

யார் தமிழ் மக்களின் ஒற்றுமைக்காக நிற்கிறார்களே அவர்களை பலப்படுத்துவன் மூலம் பிரிந்து சென்றவர்களும் மீண்டும் இணைவதற்கான வாய்ப்பு உள்ளதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் அனைத்து கட்சிகளையும், அமைப்புகளையும், தனிநபர்களையும் ஓரணியில் திரள வலியுறுத்தி, முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் முன்னாள் போராளியொருவரால் கடந்த நான்கு நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் அரசியல் கட்சி தலைவர்களின் எழுத்துமூல உறுதிமொழியை அடுத்து இன்று கைவிடப்பட்டது.


இதில் கருத்து தெரிவிக்கும் போதே சுரேஸ் பிரேமசந்திரன் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

தமிழ் தேசிய பிரச்சனையை தீர்பதற்கு அனைவரும் ஒற்றுமையாக முன்னின்று உழைப்பதாக சுரேஸ் பிரேமசந்திரன் உறுதியளித்தார்.

எனினும் ஒருசிலர் பிரிந்து நிற்பதும் வருத்தத்திற்குரிய விடயம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அனைவரும் ஒன்று படவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஏன் எனில் இது தனிநபர் பிரச்சனை இல்லை எனவும் ஒட்டு மொத்த தமிழ் மக்களின் பிச்சனை என்றும் சுரேஸ் பிரேமசந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு குடையின் கீழ் ஒன்றுபடுங்கள் - பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வாருங்கள் - சுரேஸ் அழைப்பு யார் தமிழ் மக்களின் ஒற்றுமைக்காக நிற்கிறார்களே அவர்களை பலப்படுத்துவன் மூலம் பிரிந்து சென்றவர்களும் மீண்டும் இணைவதற்கான வாய்ப்பு உள்ளதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் அனைத்து கட்சிகளையும், அமைப்புகளையும், தனிநபர்களையும் ஓரணியில் திரள வலியுறுத்தி, முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் முன்னாள் போராளியொருவரால் கடந்த நான்கு நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் அரசியல் கட்சி தலைவர்களின் எழுத்துமூல உறுதிமொழியை அடுத்து இன்று கைவிடப்பட்டது.இதில் கருத்து தெரிவிக்கும் போதே சுரேஸ் பிரேமசந்திரன் இவ்வாறு தெரிவித்திருந்தார்.தமிழ் தேசிய பிரச்சனையை தீர்பதற்கு அனைவரும் ஒற்றுமையாக முன்னின்று உழைப்பதாக சுரேஸ் பிரேமசந்திரன் உறுதியளித்தார்.எனினும் ஒருசிலர் பிரிந்து நிற்பதும் வருத்தத்திற்குரிய விடயம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அனைவரும் ஒன்று படவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.ஏன் எனில் இது தனிநபர் பிரச்சனை இல்லை எனவும் ஒட்டு மொத்த தமிழ் மக்களின் பிச்சனை என்றும் சுரேஸ் பிரேமசந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement