• Jun 18 2024

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் போராட்டம்..! பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம்!

Chithra / Jan 18th 2024, 3:30 pm
image

Advertisement

 

கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துக்கு  அருகில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர் புகைப்  பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

இன்று முற்பகல் (18)  இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டபோதே போராட்டத்தைக்  கலைக்க பொலிஸார் கண்ணீர் புகைப்  பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள்  சம்பள அதிகரிப்புக் கோரி பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.   

மேலும், சம்பள முரண்பாடுகளை தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட நேரிடும் என  தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் போராட்டம். பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம்  கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துக்கு  அருகில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர் புகைப்  பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.இன்று முற்பகல் (18)  இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டபோதே போராட்டத்தைக்  கலைக்க பொலிஸார் கண்ணீர் புகைப்  பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள்  சம்பள அதிகரிப்புக் கோரி பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.   மேலும், சம்பள முரண்பாடுகளை தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட நேரிடும் என  தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement