• Nov 26 2024

உலகில் சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இடம்பிடித்த கொழும்பு பல்கலைக்கழகம்...!

Sharmi / Jun 6th 2024, 9:35 am
image

உலகில் உள்ள தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் வகைப்பாட்டின் படி, கொழும்பு பல்கலைக்கழகம் 2024 ஆம் ஆண்டில் 951 வது இடத்தைப் பெற்றுள்ளது.

உலகின் தலைசிறந்த 1000 பல்கலைக்கழகங்களுக்குள் கொழும்பு பல்கலைக்கழகம் இடம்பிடித்திருப்பது இதுவே முதல் முறை என துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் எச். டி. கருணாரத்ன தெரிவித்தார்.

இதன்படி, கொழும்பு பல்கலைக்கழகம் 951-1000 நிலையை எட்டியுள்ளது. 

கடந்த ஆண்டு, கொழும்பு பல்கலைக்கழகம் 1001 மற்றும் 1200 க்கு இடையில் இருந்தது.

ஆசிரியர் - மாணவர் விகிதம், உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழக ஆசிரியர்களால் நடத்தப்படும் ஆராய்ச்சி, சர்வதேச இதழ்களில் அவர்களால் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் எண்ணிக்கை மற்றும் சர்வதேசமயமாக்கலின் சதவீதம் ஆகியவை இந்த வகைப்பாட்டிற்கு 8 காரணிகளை அடிப்படையாகக் கொண்டவையாக அமைந்துள்ளது.

நாட்டின் மிகப் பழமையான பல்கலைக்கழகம் மற்றும் அதிக மாணவர்களைக் கொண்ட பல்கலைக்கழகம் என்ற சாதனையைக் கொண்டதாக கொழும்பு பல்கலைக்கழகம் காணப்படுவதாக உபவேந்தர் மேலும் குறிப்பிடுகிறார்.


உலகில் சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இடம்பிடித்த கொழும்பு பல்கலைக்கழகம். உலகில் உள்ள தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் வகைப்பாட்டின் படி, கொழும்பு பல்கலைக்கழகம் 2024 ஆம் ஆண்டில் 951 வது இடத்தைப் பெற்றுள்ளது.உலகின் தலைசிறந்த 1000 பல்கலைக்கழகங்களுக்குள் கொழும்பு பல்கலைக்கழகம் இடம்பிடித்திருப்பது இதுவே முதல் முறை என துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் எச். டி. கருணாரத்ன தெரிவித்தார்.இதன்படி, கொழும்பு பல்கலைக்கழகம் 951-1000 நிலையை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு, கொழும்பு பல்கலைக்கழகம் 1001 மற்றும் 1200 க்கு இடையில் இருந்தது.ஆசிரியர் - மாணவர் விகிதம், உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழக ஆசிரியர்களால் நடத்தப்படும் ஆராய்ச்சி, சர்வதேச இதழ்களில் அவர்களால் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் எண்ணிக்கை மற்றும் சர்வதேசமயமாக்கலின் சதவீதம் ஆகியவை இந்த வகைப்பாட்டிற்கு 8 காரணிகளை அடிப்படையாகக் கொண்டவையாக அமைந்துள்ளது.நாட்டின் மிகப் பழமையான பல்கலைக்கழகம் மற்றும் அதிக மாணவர்களைக் கொண்ட பல்கலைக்கழகம் என்ற சாதனையைக் கொண்டதாக கொழும்பு பல்கலைக்கழகம் காணப்படுவதாக உபவேந்தர் மேலும் குறிப்பிடுகிறார்.

Advertisement

Advertisement

Advertisement