தமது பொய்களுக்கு நீண்ட ஆயுள் இல்லை என்பதை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் உணர்ந்து கொண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தாம் ஏற்கனவே கூறிய பொய்களால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர் என்பதை உணர்ந்து கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க,
அடுத்து தேர்தலை நடத்துவதுவதா இல்லையா என்பதை மதிப்பாய்வு செய்வதற்காக மக்கள் சந்திப்புக்களை நடத்த ஆரம்பித்துள்ளார்.
அரசியல் மேடைகளில் முன்னாள் ஆட்சியாளர்களை விமர்சித்துக் கொண்டிருப்பதற்கு, நீங்கள் எதிர்க்கட்சி உறுப்பினர் இல்லை என்பதை ஜனாதிபதிக்கு நினைவுபடுத்துகின்றேன்.
ஊழல், மோசடியாளர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்புடனேயே, மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு மூன்றில் இரண்டுக்கும் பெரும்பான்மையை வழங்கினர்.
ஆனால் இன்றும் ராஜபக்ஷர்கள் மீது குற்றஞ்சுமத்துவதும், குறை கூறுவதும் மாத்திரமே இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.
சட்டத்தை நடைமுறைப்படுத்தும் தைரியம் இந்த அரசாங்கத்துக்கு இல்லை.
அரசாங்கம் அதன் இயலாமையை மறைப்பதற்காக மீண்டும் மக்கள் மத்தியில் சென்று பொய்களைக் கூற ஆரம்பித்திருக்கிறது.
உள்ளுராட்சி தேர்தல் கூட அறிவிக்கப்படாத நிலையில் எதற்காக பொது கூட்டங்கள் நடத்தப்படுகின்றன? அரசாங்கம் மழுப்பல் செயற்பாடுகளில் ஈடுபட்டாலும், வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் வரை அவற்றை நாம் நினைவுபடுத்திக் கொண்டிருப்போம்.
அமைதியான ஒழுக்கமான நாட்டை உருவாக்குவதாக அரசாங்கம் கூறினாலும், தினந்தோறும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகிக் கொண்டு தான் இருக்கின்றன என அவர் தெரிவித்தார்.
பொய்களை மறக்கடிக்க அநாவசிய பொதுக் கூட்டங்கள்; அநுரவை சாடும் எதிர்க்கட்சி எம்.பி. தமது பொய்களுக்கு நீண்ட ஆயுள் இல்லை என்பதை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் உணர்ந்து கொண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,தாம் ஏற்கனவே கூறிய பொய்களால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர் என்பதை உணர்ந்து கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அடுத்து தேர்தலை நடத்துவதுவதா இல்லையா என்பதை மதிப்பாய்வு செய்வதற்காக மக்கள் சந்திப்புக்களை நடத்த ஆரம்பித்துள்ளார். அரசியல் மேடைகளில் முன்னாள் ஆட்சியாளர்களை விமர்சித்துக் கொண்டிருப்பதற்கு, நீங்கள் எதிர்க்கட்சி உறுப்பினர் இல்லை என்பதை ஜனாதிபதிக்கு நினைவுபடுத்துகின்றேன். ஊழல், மோசடியாளர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்புடனேயே, மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு மூன்றில் இரண்டுக்கும் பெரும்பான்மையை வழங்கினர். ஆனால் இன்றும் ராஜபக்ஷர்கள் மீது குற்றஞ்சுமத்துவதும், குறை கூறுவதும் மாத்திரமே இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.சட்டத்தை நடைமுறைப்படுத்தும் தைரியம் இந்த அரசாங்கத்துக்கு இல்லை. அரசாங்கம் அதன் இயலாமையை மறைப்பதற்காக மீண்டும் மக்கள் மத்தியில் சென்று பொய்களைக் கூற ஆரம்பித்திருக்கிறது. உள்ளுராட்சி தேர்தல் கூட அறிவிக்கப்படாத நிலையில் எதற்காக பொது கூட்டங்கள் நடத்தப்படுகின்றன அரசாங்கம் மழுப்பல் செயற்பாடுகளில் ஈடுபட்டாலும், வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் வரை அவற்றை நாம் நினைவுபடுத்திக் கொண்டிருப்போம்.அமைதியான ஒழுக்கமான நாட்டை உருவாக்குவதாக அரசாங்கம் கூறினாலும், தினந்தோறும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகிக் கொண்டு தான் இருக்கின்றன என அவர் தெரிவித்தார்.