• Nov 24 2024

புலம்பெயர் தொழிலாளர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் - அனுர அரசு எடுத்த நடவடிக்கை

Chithra / Oct 16th 2024, 12:59 pm
image

 

புலம்பெயர்ந்த தொழிலாளர் சமூகத்தின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் மற்றும் ஆட்கடத்தல் ஆகியவற்றைக் கையாள்வதற்காக விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கையை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க முன்னெடுத்துள்ளார்.

இதனடிப்படையில், இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்கு “ஜனாதிபதியிடம் சொல்லுங்கள்” என பெயரிடப்பட்டுள்ளதுடன், அதன் பிரசாரம் நேற்று (15) பணியகத்தின் பிரதான அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர் சமூகத்தின் பிரச்சினைகளை முன்வைப்பதற்கான பொதுவான இடம் உருவாக்கப்பட்டுள்ளது.

டென்சில் கொப்பேகடுவ மாவத்தையில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதான அலுவலகத்தின் கீழ் தளத்தில் அனைத்து வகையான குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள் மற்றும் குறைகளை பதிவு செய்யும் வகையில் "தலைவரிடம் சொல்லுங்கள்" என்ற புதிய சாளரம் திறக்கப்பட்டுள்ளது.

நாட்டின் எந்தவொரு குடிமகனும் தங்கள் புகாரை அங்கு சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பல்வேறு வழிகளில் முறைப்பாடுகளை சமர்ப்பிக்கலாம் எனவும் சில சமயங்களில் வெளியாட்கள் அல்லது அரச அதிகாரிகளின் அநீதிகளாக இருக்கலாம். 

ஆகவே அநீதிகள் எதுவாக இருந்தாலும் அதற்கான தீர்வை வழங்க தரவரிசை பாராமல் பாடுபடுவோம் என கோசல விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு, 0112 864188 என்ற தொலைபேசி இலக்கம், 0717 593 593 என்ற வட்ஸ்அப் இலக்கம் மற்றும் talkchairman@slbfe.lk என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் அழைப்புகள் பெறப்பட்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் - அனுர அரசு எடுத்த நடவடிக்கை  புலம்பெயர்ந்த தொழிலாளர் சமூகத்தின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் மற்றும் ஆட்கடத்தல் ஆகியவற்றைக் கையாள்வதற்காக விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.குறித்த நடவடிக்கையை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க முன்னெடுத்துள்ளார்.இதனடிப்படையில், இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்கு “ஜனாதிபதியிடம் சொல்லுங்கள்” என பெயரிடப்பட்டுள்ளதுடன், அதன் பிரசாரம் நேற்று (15) பணியகத்தின் பிரதான அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.இத்திட்டத்தின் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர் சமூகத்தின் பிரச்சினைகளை முன்வைப்பதற்கான பொதுவான இடம் உருவாக்கப்பட்டுள்ளது.டென்சில் கொப்பேகடுவ மாவத்தையில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதான அலுவலகத்தின் கீழ் தளத்தில் அனைத்து வகையான குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள் மற்றும் குறைகளை பதிவு செய்யும் வகையில் "தலைவரிடம் சொல்லுங்கள்" என்ற புதிய சாளரம் திறக்கப்பட்டுள்ளது.நாட்டின் எந்தவொரு குடிமகனும் தங்கள் புகாரை அங்கு சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில், பல்வேறு வழிகளில் முறைப்பாடுகளை சமர்ப்பிக்கலாம் எனவும் சில சமயங்களில் வெளியாட்கள் அல்லது அரச அதிகாரிகளின் அநீதிகளாக இருக்கலாம். ஆகவே அநீதிகள் எதுவாக இருந்தாலும் அதற்கான தீர்வை வழங்க தரவரிசை பாராமல் பாடுபடுவோம் என கோசல விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.அத்தோடு, 0112 864188 என்ற தொலைபேசி இலக்கம், 0717 593 593 என்ற வட்ஸ்அப் இலக்கம் மற்றும் talkchairman@slbfe.lk என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் அழைப்புகள் பெறப்பட்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement