• Jun 18 2024

கிளிநொச்சியில் சுகாதார சீர்கேட்டுடன் உணவகங்கள்...! பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் பாய்ச்சல்...!

Sharmi / Jun 15th 2024, 12:48 pm
image

Advertisement

கிளிநொச்சியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 4 உணவகங்களுக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர்களால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அண்டிய பகுதியில் உள்ள உணவகங்களில் சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் சோதனையின்போதே சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 4 உணவங்கள் அடையாளம் காணப்பட்டது.

குறித்த உணவகங்களில், மக்கள் பாவனைக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உணவுப் பொருட்கள் காணப்பட்டதுடன், குறித்த உணவங்களுக்கு எதிராக கிளிநொச்சி நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நான்கு உணவக உரிமையாளர்களுக்கும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தண்டப் பணம் விதிக்கப்பட்டுள்ளது.

அதேவளை, இரண்டு உணவகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு சுகாதார பரிசோதகரின் பரிசீலனையின் பின்னர் மீண்டும் உணவகங்கங்களை திறக்க அனுமதிக்கப்படுமென சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.




கிளிநொச்சியில் சுகாதார சீர்கேட்டுடன் உணவகங்கள். பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் பாய்ச்சல். கிளிநொச்சியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 4 உணவகங்களுக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர்களால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அண்டிய பகுதியில் உள்ள உணவகங்களில் சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் சோதனையின்போதே சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 4 உணவங்கள் அடையாளம் காணப்பட்டது.குறித்த உணவகங்களில், மக்கள் பாவனைக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உணவுப் பொருட்கள் காணப்பட்டதுடன், குறித்த உணவங்களுக்கு எதிராக கிளிநொச்சி நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நான்கு உணவக உரிமையாளர்களுக்கும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தண்டப் பணம் விதிக்கப்பட்டுள்ளது.அதேவளை, இரண்டு உணவகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு சுகாதார பரிசோதகரின் பரிசீலனையின் பின்னர் மீண்டும் உணவகங்கங்களை திறக்க அனுமதிக்கப்படுமென சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement