• Apr 04 2025

நிலவும் சீரற்ற காலநிலை; பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை..!

Sharmi / Nov 20th 2024, 7:59 pm
image

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, காலி, களுத்துறை, கேகாலை, குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மோசமான வானிலையை கருத்தில் கொண்டு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, தென்கிழக்கு வங்காள விரிகுடாவை அண்மித்து எதிர்வரும் 23ஆம் திகதி குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகலாம் எனவும் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த இரு நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நிலவும் சீரற்ற காலநிலை; பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை. நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அதன்படி, காலி, களுத்துறை, கேகாலை, குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மோசமான வானிலையை கருத்தில் கொண்டு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இதேவேளை, தென்கிழக்கு வங்காள விரிகுடாவை அண்மித்து எதிர்வரும் 23ஆம் திகதி குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகலாம் எனவும் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த இரு நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now