• Nov 19 2024

புத்தளம் மாவட்டத்தில் 2 மணிவரை - 41 வீதம் வாக்குப் பதிவு!

Tharmini / Nov 14th 2024, 3:33 pm
image

10ஆவது பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு புத்தளம் மாவட்டத்தில் இன்று காலை 7.00 மணி முதல் நடைபெற்று வருகின்றது.

அந்த வகையில் புத்தளம் ஆனமடு சிலாபம் வென்னப்புவ மற்றும் நாத்தாண்டி ஆகிய தொகுதிகளில் 470 வாக்களிப்ப நிலையங்களில் மக்கள் சுறுசுறுப்பாக வாக்களித்து வருகின்றனர்.

08 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக புத்தளம் மாவட்டத்தில் ஆறு இலட்சத்தி 63 ஆயிரத்தி 673 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

புத்தளம் மாவட்டத்தில் இன்று நண்பகல் 02 மணி 41 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக புத்தளம் மாவட்டத்தில் பூர்த்தி ,

செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளரும் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான எச்.எம்.எஸ்.பீ.ஹேரத் தெரிவித்தார்.

இதேவேளை ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் முதன்மை வேட்பாளர் ஆப்தீன் எஹியா பொதுஜன பெரமுனக் கட்சியின் புத்தளம் மாவட்ட வேட்பாளர் ஏ.எச்.எம்.றியாஸ் மற்றும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு வேட்பாளர் என்.எம்.எம்.ஹிசாம் ஆகியோர் கடையாமோட்டை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலைத்திலும்,

தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட வேட்பாளர் எம்.ஜே.எம்.பைசல் விருதோடை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையிலும் ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட வேட்பாளர் எஸ்.எச்.எம்.நியாஸ் பாலாவி முஸ்லிம் வித்தியாலயத்திலும் வாக்களித்தனர்.

மேலும், ஐக்கிய மக்கள் சக்தியின் மற்றொரு வேட்பாளர் ஜே.கோகிலநாத் சிங் முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா தமிழ் மகா வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்திலும்,

சர்வஜன அதிகாரக் கட்சியின் புத்தளம் மாவட்ட முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி ஏ.டவ்ளியூ.சாதிகுல் அமீன் சிலாபம் நஸ்ரியா மத்திய கல்லூரியில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்திலும் ஜனநாயக ஐக்கிய முன்னணியின் முதன்மை வேட்பாளர் ஏ.எம்.இன்பாஸ் கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்திலும் வாக்களித்தனர்.

புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன் , பொலிஸ் ரோந்து நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





புத்தளம் மாவட்டத்தில் 2 மணிவரை - 41 வீதம் வாக்குப் பதிவு 10ஆவது பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு புத்தளம் மாவட்டத்தில் இன்று காலை 7.00 மணி முதல் நடைபெற்று வருகின்றது.அந்த வகையில் புத்தளம் ஆனமடு சிலாபம் வென்னப்புவ மற்றும் நாத்தாண்டி ஆகிய தொகுதிகளில் 470 வாக்களிப்ப நிலையங்களில் மக்கள் சுறுசுறுப்பாக வாக்களித்து வருகின்றனர்.08 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக புத்தளம் மாவட்டத்தில் ஆறு இலட்சத்தி 63 ஆயிரத்தி 673 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.புத்தளம் மாவட்டத்தில் இன்று நண்பகல் 02 மணி 41 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக புத்தளம் மாவட்டத்தில் பூர்த்தி ,செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளரும் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான எச்.எம்.எஸ்.பீ.ஹேரத் தெரிவித்தார்.இதேவேளை ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் முதன்மை வேட்பாளர் ஆப்தீன் எஹியா பொதுஜன பெரமுனக் கட்சியின் புத்தளம் மாவட்ட வேட்பாளர் ஏ.எச்.எம்.றியாஸ் மற்றும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு வேட்பாளர் என்.எம்.எம்.ஹிசாம் ஆகியோர் கடையாமோட்டை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலைத்திலும், தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட வேட்பாளர் எம்.ஜே.எம்.பைசல் விருதோடை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையிலும் ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட வேட்பாளர் எஸ்.எச்.எம்.நியாஸ் பாலாவி முஸ்லிம் வித்தியாலயத்திலும் வாக்களித்தனர்.மேலும், ஐக்கிய மக்கள் சக்தியின் மற்றொரு வேட்பாளர் ஜே.கோகிலநாத் சிங் முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா தமிழ் மகா வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்திலும், சர்வஜன அதிகாரக் கட்சியின் புத்தளம் மாவட்ட முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி ஏ.டவ்ளியூ.சாதிகுல் அமீன் சிலாபம் நஸ்ரியா மத்திய கல்லூரியில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்திலும் ஜனநாயக ஐக்கிய முன்னணியின் முதன்மை வேட்பாளர் ஏ.எம்.இன்பாஸ் கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்திலும் வாக்களித்தனர்.புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன் , பொலிஸ் ரோந்து நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement