• Apr 29 2026

ஓ.சி,ஐ. பெற்றுக் கொள்வதில் மலையக இளைஞர்கள் ஆர்வம் கொள்ள வேண்டும் -இ.தொ.கா. தவிசாளர்!

shanu / Apr 28th 2026, 12:23 pm
image

இந்திய அரசாங்கம் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மலையக மக்கள் கடல் கடந்த குடியுரிமைப் பெற்றுக் கொள்வதற்கான நடைமுறையை இலகுபடுத்தியுள்ளமைக்கு இ.தொ.கா. சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 


அதேநேரம் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்தி மலையக இளைஞர்கள் ஓ.சி.ஐ. பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என இ.தொ.கா. தவிசாளரும், முன்னாள் பாராளுமன்றப் உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,


எமது மூதாதையர்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு இருநூறு ஆண்டுகள் கடந்துள்ளன. அவர்கள் இங்கு வரும்போது இந்திய கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களையும் தங்களோடு கொண்டு வந்து இன்று வரை பரம்பரை பரம்பரையாக பின்பற்றி வருகின்றார்கள். அவர்கள் இந்தியாவுக்கு சென்று வருவதற்கான ஒரு பாலமாக கடல் கடந்த குடியுரிமை இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டு வந்தது.


எனினும் அதை வழங்குவதற்கு,  மலையக மக்ககளுக்கும் இந்தியாவுக்கும் வம்சாவளி அடிப்படையில் உறுதிப் படுத்தக் கூடிய ஆவணங்கள் கோரப்பட்டு வந்தது. இத்தகைய ஆவணங்களை எல்லோராலும் சமர்ப்பிக்கக் கூடிய வாய்ப்புகள் இருக்கவில்லை. 


அத்தோடு அண்மைக் காலமாக இந்தக் குடியுரிமை வழங்கும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. எனவே, மலையகம் சார்ந்த பல்வேறு அமைப்புகளும் ஓ.சி.ஐ. வழங்க வேண்டும் என்று இந்திய அரசாங்கத்தை அடிக்கடி வலியுறுத்தி வந்தன.


அதன் பயனாக அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஸ்ணன் ஓ.சி.ஐ. வழங்குவதற்கான நடைமுறையை இலகுவாக்கியுள்ளதாக தெரிவித்திருந்தமை மகிழ்ச்சியான விடயம் ஆகும். இதனூடாக இந்தியாவில் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் தங்கியிருந்து கல்வி கற்கவும், தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ளவும் வசதி கிடைத்துள்ளது.


எனவே, மலையக இளைஞர், யுவதிகள் தமது உயர்கல்வியை இந்தியாவில் தொடர்வதற்கும், வேலை வாய்ப்புகளையும், வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் சந்தர்ப்பம் வாய்த்துள்ளது. இப்போது கிடைத்துள்ள சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஓ.சி.ஐ. பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும். அவ்வாறு பெற்றுக் கொள்ளும் போது, அடுத்து வரும் சந்ததியினரும் இதை இலகுவாகப் பெற்றுக் கொள்ளக் கூடியதாகவும், பல்வேறு நன்மைகளுக்கு வழிவகுப்பதாகவும் அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஓ.சி,ஐ. பெற்றுக் கொள்வதில் மலையக இளைஞர்கள் ஆர்வம் கொள்ள வேண்டும் -இ.தொ.கா. தவிசாளர் இந்திய அரசாங்கம் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மலையக மக்கள் கடல் கடந்த குடியுரிமைப் பெற்றுக் கொள்வதற்கான நடைமுறையை இலகுபடுத்தியுள்ளமைக்கு இ.தொ.கா. சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேநேரம் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்தி மலையக இளைஞர்கள் ஓ.சி.ஐ. பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என இ.தொ.கா. தவிசாளரும், முன்னாள் பாராளுமன்றப் உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,எமது மூதாதையர்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு இருநூறு ஆண்டுகள் கடந்துள்ளன. அவர்கள் இங்கு வரும்போது இந்திய கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களையும் தங்களோடு கொண்டு வந்து இன்று வரை பரம்பரை பரம்பரையாக பின்பற்றி வருகின்றார்கள். அவர்கள் இந்தியாவுக்கு சென்று வருவதற்கான ஒரு பாலமாக கடல் கடந்த குடியுரிமை இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டு வந்தது.எனினும் அதை வழங்குவதற்கு,  மலையக மக்ககளுக்கும் இந்தியாவுக்கும் வம்சாவளி அடிப்படையில் உறுதிப் படுத்தக் கூடிய ஆவணங்கள் கோரப்பட்டு வந்தது. இத்தகைய ஆவணங்களை எல்லோராலும் சமர்ப்பிக்கக் கூடிய வாய்ப்புகள் இருக்கவில்லை. அத்தோடு அண்மைக் காலமாக இந்தக் குடியுரிமை வழங்கும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. எனவே, மலையகம் சார்ந்த பல்வேறு அமைப்புகளும் ஓ.சி.ஐ. வழங்க வேண்டும் என்று இந்திய அரசாங்கத்தை அடிக்கடி வலியுறுத்தி வந்தன.அதன் பயனாக அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஸ்ணன் ஓ.சி.ஐ. வழங்குவதற்கான நடைமுறையை இலகுவாக்கியுள்ளதாக தெரிவித்திருந்தமை மகிழ்ச்சியான விடயம் ஆகும். இதனூடாக இந்தியாவில் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் தங்கியிருந்து கல்வி கற்கவும், தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ளவும் வசதி கிடைத்துள்ளது.எனவே, மலையக இளைஞர், யுவதிகள் தமது உயர்கல்வியை இந்தியாவில் தொடர்வதற்கும், வேலை வாய்ப்புகளையும், வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் சந்தர்ப்பம் வாய்த்துள்ளது. இப்போது கிடைத்துள்ள சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஓ.சி.ஐ. பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும். அவ்வாறு பெற்றுக் கொள்ளும் போது, அடுத்து வரும் சந்ததியினரும் இதை இலகுவாகப் பெற்றுக் கொள்ளக் கூடியதாகவும், பல்வேறு நன்மைகளுக்கு வழிவகுப்பதாகவும் அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement