• Sep 20 2024

மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அமெரிக்க தூதுவர் - எதற்கு தெரியுமா..??? samugammedia

Tamil nila / Jun 24th 2023, 5:48 pm
image

Advertisement

இலங்கையின் பழமையான பங்காளியாக அமெரிக்கா இருப்பதாகவும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வலுவாக இருப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.


அமெரிக்காவின் 247வது சுதந்திரப் பிரகடனம் மற்றும் 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நேற்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கலந்துகொண்டார்.இதன் போதே அமெரிக்கத் தூதுவர் இவ்வாறு மகிழச்சி வெளியிட்டிருந்தார்.

கடந்த வருடம் மட்டும் இலங்கையில் பொருளாதார நெருக்கடியின் மத்தியில் இருந்தது, 

விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்ற உரங்கள் முதல், சிறு வர்த்தகர்களுக்கான நிதி உதவியை அமெரிக்கா வழங்கியது.


அத்துடன் அமெரிக்க அரசாங்கம் 270 மில்லியன் டொலர்களையும் மேலதிகமாக உதவியாக வழங்கியுள்ளது.

2022 இல் மட்டும் 3.3 பில்லியன் டொலர் மதிப்புள்ள ஏற்றுமதியுடன், இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக அமெரிக்கா உள்ளது. 


மேலும், கடந்த வருடம் 3 ஆயிரம் மாணவர்கள் கல்விக்காக அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டதுடன், இலங்கையின் திறமையான மாணவர்களின் விருப்பத் தேர்வாக அமெரிக்கா மாறியுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் குறிப்பிட்டுள்ளார்.

மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அமெரிக்க தூதுவர் - எதற்கு தெரியுமா. samugammedia இலங்கையின் பழமையான பங்காளியாக அமெரிக்கா இருப்பதாகவும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வலுவாக இருப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.அமெரிக்காவின் 247வது சுதந்திரப் பிரகடனம் மற்றும் 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நேற்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கலந்துகொண்டார்.இதன் போதே அமெரிக்கத் தூதுவர் இவ்வாறு மகிழச்சி வெளியிட்டிருந்தார்.கடந்த வருடம் மட்டும் இலங்கையில் பொருளாதார நெருக்கடியின் மத்தியில் இருந்தது, விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்ற உரங்கள் முதல், சிறு வர்த்தகர்களுக்கான நிதி உதவியை அமெரிக்கா வழங்கியது.அத்துடன் அமெரிக்க அரசாங்கம் 270 மில்லியன் டொலர்களையும் மேலதிகமாக உதவியாக வழங்கியுள்ளது.2022 இல் மட்டும் 3.3 பில்லியன் டொலர் மதிப்புள்ள ஏற்றுமதியுடன், இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக அமெரிக்கா உள்ளது. மேலும், கடந்த வருடம் 3 ஆயிரம் மாணவர்கள் கல்விக்காக அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டதுடன், இலங்கையின் திறமையான மாணவர்களின் விருப்பத் தேர்வாக அமெரிக்கா மாறியுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement