• Mar 22 2025

ஐக்கிய அமெரிக்க இந்து பசுபிக் கட்டளையின் கட்டளை அதிகாரி- ஜனாதிபதி அநுர சந்திப்பு..!

Sharmi / Mar 22nd 2025, 8:57 am
image

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ஐக்கிய அமெரிக்க இந்து - பசுபிக் கட்டளையின் (INDOPACOM) கட்டளை அதிகாரி அட்மிரல் செமுவேல் ஜே.பபாரோ ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்றையதினம்(21) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. 

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டத்திற்கு பாராட்டு தெரிவித்த அதேநேரம், இந்து சமுத்திர வலயத்தை பாதுகாத்து அமைதியான இந்து சமுத்திர வலயத்தை பேணுவதற்கு இலங்கை வழங்கும் ஒத்துழைப்பையும் அட்மிரல் பபாரோ பாராட்டினார். 

இலங்கை மற்றும் ஐக்கிய அமெரிக்காவிற்கு  இடையில் காணப்படும் வலுவான தொடர்புகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லவும், இலங்கை அரசாங்கத்தின் புதிய வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக்கிக்கொள்ளவும் தனது ஒத்துழைப்பை வழங்குவதாக அட்மிரல் ஜே.பபாரோ தெரிவித்தார்.

இலங்கையின் பாதுகாப்பு துறையின் மனித வள அபிவிருத்திக்கு ஐக்கிய அமெரிக்காவினால்  ஆரம்ப காலத்திலிருந்து இதுவரையில் வழங்கப்பட்டுவரும் ஒத்துழைப்புக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதன்போது நன்றி தெரிவித்தார். 

வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) லெப்டினன் கேணல் அன்டனி நெல்சன், ஐக்கிய அமெரிக்க இந்து - பசுபிக் கட்டளையின் சிரேஷ்ட வௌிநாட்டு கொள்கை ஆலோசகர் டேவிட் ரென்ஸ் (David Ranz) உள்ளிட்டவர்கள் இதில் கலந்துகொண்டனர். 


ஐக்கிய அமெரிக்க இந்து பசுபிக் கட்டளையின் கட்டளை அதிகாரி- ஜனாதிபதி அநுர சந்திப்பு. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ஐக்கிய அமெரிக்க இந்து - பசுபிக் கட்டளையின் (INDOPACOM) கட்டளை அதிகாரி அட்மிரல் செமுவேல் ஜே.பபாரோ ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்றையதினம்(21) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டத்திற்கு பாராட்டு தெரிவித்த அதேநேரம், இந்து சமுத்திர வலயத்தை பாதுகாத்து அமைதியான இந்து சமுத்திர வலயத்தை பேணுவதற்கு இலங்கை வழங்கும் ஒத்துழைப்பையும் அட்மிரல் பபாரோ பாராட்டினார். இலங்கை மற்றும் ஐக்கிய அமெரிக்காவிற்கு  இடையில் காணப்படும் வலுவான தொடர்புகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லவும், இலங்கை அரசாங்கத்தின் புதிய வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக்கிக்கொள்ளவும் தனது ஒத்துழைப்பை வழங்குவதாக அட்மிரல் ஜே.பபாரோ தெரிவித்தார்.இலங்கையின் பாதுகாப்பு துறையின் மனித வள அபிவிருத்திக்கு ஐக்கிய அமெரிக்காவினால்  ஆரம்ப காலத்திலிருந்து இதுவரையில் வழங்கப்பட்டுவரும் ஒத்துழைப்புக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதன்போது நன்றி தெரிவித்தார். வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) லெப்டினன் கேணல் அன்டனி நெல்சன், ஐக்கிய அமெரிக்க இந்து - பசுபிக் கட்டளையின் சிரேஷ்ட வௌிநாட்டு கொள்கை ஆலோசகர் டேவிட் ரென்ஸ் (David Ranz) உள்ளிட்டவர்கள் இதில் கலந்துகொண்டனர். 

Advertisement

Advertisement

Advertisement