• Dec 25 2024

இலங்கைக்கு வருகிறார் அமெரிக்க உலக இளையோர் விவகாரங்களுக்கான சிறப்பு தூதர்!

Chithra / Nov 12th 2024, 11:45 am
image


அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உலக இளையோர் பிரச்சினைகளுக்கான சிறப்பு தூதர், அபி பின்கெனவர் (Abby Finkenauer) இலங்கை மற்றும் நேபாளத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

இன்று 12 ஆம் திகதி முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை அபி பின்கெனவர் இலங்கை மற்றும் நேபாளத்திற்கான விஜயத்தை மேற்கொள்கின்றார்.

இலங்கையில், அமெரிக்க தூதரகம் மற்றும் இலங்கையின் கூட்டுறவின் மூலம் கல்வி, தலைமைத்துவம் மற்றும் குடியுரிமை பங்கேற்பு போன்ற துறைகளில் இளம் தலைவர்களை ஊக்குவிக்கும் திட்டங்களின் தாக்கத்தை சிறப்பு தூதர் பின்கெனவர் இந்த விஜயத்தின் போது அவதானிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்காசிய இளையோர் தலைவர்களுடன் கூட்டுறவை அதிகரித்து, உலகளாவிய இளையோர் பிரச்சினைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உலக இளையோர் பிரச்சினைகளுக்கான சிறப்பு தூதர் அபி பின்கெனவரின் விஜயத்தின் நோக்கமாகும்.

இலங்கைக்கு வருகிறார் அமெரிக்க உலக இளையோர் விவகாரங்களுக்கான சிறப்பு தூதர் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உலக இளையோர் பிரச்சினைகளுக்கான சிறப்பு தூதர், அபி பின்கெனவர் (Abby Finkenauer) இலங்கை மற்றும் நேபாளத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.இன்று 12 ஆம் திகதி முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை அபி பின்கெனவர் இலங்கை மற்றும் நேபாளத்திற்கான விஜயத்தை மேற்கொள்கின்றார்.இலங்கையில், அமெரிக்க தூதரகம் மற்றும் இலங்கையின் கூட்டுறவின் மூலம் கல்வி, தலைமைத்துவம் மற்றும் குடியுரிமை பங்கேற்பு போன்ற துறைகளில் இளம் தலைவர்களை ஊக்குவிக்கும் திட்டங்களின் தாக்கத்தை சிறப்பு தூதர் பின்கெனவர் இந்த விஜயத்தின் போது அவதானிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தெற்காசிய இளையோர் தலைவர்களுடன் கூட்டுறவை அதிகரித்து, உலகளாவிய இளையோர் பிரச்சினைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உலக இளையோர் பிரச்சினைகளுக்கான சிறப்பு தூதர் அபி பின்கெனவரின் விஜயத்தின் நோக்கமாகும்.

Advertisement

Advertisement

Advertisement