• Jul 14 2025

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி: துமிந்த திசாநாயக்கவுக்கு பிணை!

shanuja / Jul 14th 2025, 11:15 am
image

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் விவசாய அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை விடுதலை செய்ய கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போது, முன்னாள் அமைச்சர் கடுமையான பிணை நிபந்தனைகளின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டார்.


வெள்ளவத்தையில் உள்ள ஹேவ்லாக் சிட்டி அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட T-56 தாக்குதல் துப்பாக்கி தொடர்பாக முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மே மாதம் கைது செய்யப்பட்டார்.


குறித்த ஆயுதம் வைத்திருந்ததாக 40 மற்றும் 68 வயதுடைய இரண்டு பெண்கள் முதலில் கைது செய்யப்பட்டனர்.


துப்பாக்கி தொடர்பான விசாரணைகள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிடம் (TID) ஒப்படைக்கப்பட்டு அதன் பின்னர் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி: துமிந்த திசாநாயக்கவுக்கு பிணை தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் விவசாய அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை விடுதலை செய்ய கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போது, முன்னாள் அமைச்சர் கடுமையான பிணை நிபந்தனைகளின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டார்.வெள்ளவத்தையில் உள்ள ஹேவ்லாக் சிட்டி அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட T-56 தாக்குதல் துப்பாக்கி தொடர்பாக முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மே மாதம் கைது செய்யப்பட்டார்.குறித்த ஆயுதம் வைத்திருந்ததாக 40 மற்றும் 68 வயதுடைய இரண்டு பெண்கள் முதலில் கைது செய்யப்பட்டனர்.துப்பாக்கி தொடர்பான விசாரணைகள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிடம் (TID) ஒப்படைக்கப்பட்டு அதன் பின்னர் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement