• Sep 20 2024

இயற்கை உரத்தை பயன்படுத்த வேண்டும் - மீண்டும் கோட்டாவின் கொள்கையை வலியுறுத்தும் கிழக்கு மாகாண ஆளுநர்! SamugamMedia

Tamil nila / Feb 16th 2023, 3:18 pm
image

Advertisement

கிழக்கு மாகாணத்திலுள்ள விவசாயிகள் இயற்கை உரங்களை பயன்படுத்திய விவசாயம் செய்வதற்கு பழகிக் கொள்ள வேண்டுமென கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் வலியுறுத்தியுள்ளார்.


திருகோணமலையில் அமைந்துள்ள இந்து கலாசார மண்டபத்தில் ஜப்பானிய அரச சார்பற்ற நிறுவனமான 'பீஸ் வைன்' நடத்திய உள்ளூர் சந்தைக்கு சேதன பசளை உற்பத்திகளை அறிமுகப்படுத்தும் கண்காட்சியை இன்று ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.


எங்கள் மண்ணைப் பாதுகாப்பதற்கு ஒருபோதும் பின்னிற்கக்கூடாது 

இன்று முதல் விவசாயிகள் அதனை செய்ய வேண்டும்.

 

எமது நாட்டில் 02 ஏக்கர் நெற்செய்கையை மேற்கொள்ளும் பெருமளவிலான விவசாயிகள் உள்ளனர். 

திருகோணமலை மாவட்டத்தில் மட்டுமன்றி மாகாணம் முழுவதிலும் உள்ள விவசாயிகள் இவ்வாறான விடயங்களுக்குப் பழகிக் கொள்ள வேண்டும். 


விசமில்லா உணவுக்காக ஜப்பானில் மிக முக்கியமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 

அத்தகைய பொருட்களுக்கு நல்ல கேள்வி உள்ளது. 


எனவே, இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு ஆணையை வழங்கியதற்காக ஜப்பான் தூதருக்கு நான் குறிப்பாக நன்றி கூறுகிறேன்.


தொடர்ந்தும் இரசாயனங்களை விவசாயத்திற்கு பயன்படுத்தினால் 2050 ஆம் ஆண்டளவில் எமது மண் முற்றாக அழிந்துவிடும் என்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் சுட்டிக்காட்டியுள்ளார்.

இயற்கை உரத்தை பயன்படுத்த வேண்டும் - மீண்டும் கோட்டாவின் கொள்கையை வலியுறுத்தும் கிழக்கு மாகாண ஆளுநர் SamugamMedia கிழக்கு மாகாணத்திலுள்ள விவசாயிகள் இயற்கை உரங்களை பயன்படுத்திய விவசாயம் செய்வதற்கு பழகிக் கொள்ள வேண்டுமென கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் வலியுறுத்தியுள்ளார்.திருகோணமலையில் அமைந்துள்ள இந்து கலாசார மண்டபத்தில் ஜப்பானிய அரச சார்பற்ற நிறுவனமான 'பீஸ் வைன்' நடத்திய உள்ளூர் சந்தைக்கு சேதன பசளை உற்பத்திகளை அறிமுகப்படுத்தும் கண்காட்சியை இன்று ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.எங்கள் மண்ணைப் பாதுகாப்பதற்கு ஒருபோதும் பின்னிற்கக்கூடாது இன்று முதல் விவசாயிகள் அதனை செய்ய வேண்டும். எமது நாட்டில் 02 ஏக்கர் நெற்செய்கையை மேற்கொள்ளும் பெருமளவிலான விவசாயிகள் உள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில் மட்டுமன்றி மாகாணம் முழுவதிலும் உள்ள விவசாயிகள் இவ்வாறான விடயங்களுக்குப் பழகிக் கொள்ள வேண்டும். விசமில்லா உணவுக்காக ஜப்பானில் மிக முக்கியமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அத்தகைய பொருட்களுக்கு நல்ல கேள்வி உள்ளது. எனவே, இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு ஆணையை வழங்கியதற்காக ஜப்பான் தூதருக்கு நான் குறிப்பாக நன்றி கூறுகிறேன்.தொடர்ந்தும் இரசாயனங்களை விவசாயத்திற்கு பயன்படுத்தினால் 2050 ஆம் ஆண்டளவில் எமது மண் முற்றாக அழிந்துவிடும் என்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement