• Jan 07 2025

வடமராட்சி, வடக்கு பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் : புதுவருட கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு!

Tharmini / Jan 1st 2025, 12:12 pm
image

025ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று(01) வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

வருடத்திற்கான முதல்நாள் கடமைகளை ஆரம்பிக்கும் அரச சேவை சத்தியப்பிரமாண நிகழ்வு பிரதேச செயலாளர் சி.சத்தியசீலன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது புதிய ஆண்டினை வரவேற்று தமது கடமைகளை ஆரம்பிக்கும் முகமாக இன்று (01), காலை 8.30 மணிக்கு பிரதேச செயலாளரால் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்ட பின்னர், தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

தொடர்ந்து நாட்டுக்காக உயிர் நீத்தவர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, உத்தியோகத்தர்கள் அனைவரும் ‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) திட்டத்துடன் இணைக்கப்பட்ட உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

மேலும், அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் நடைபெற்றது "க்ளீன் ஸ்ரீலங்கா" தேசிய வேலைத் திட்ட நிகழ்வில் உத்தியோகத்தர்கள் நேரலை ஊடக இணைந்திருந்தனர்.

நிகழ்வில் பிரதேசசெயலாளர் சி.சத்தியசீலன் அவர்கள் 2025 ஆம் ஆண்டிற்கான கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து சிறப்புரை ஆற்றியிருந்ததுடன் இந்த வருடம் அனைவரது வாழ்வில் மிகுந்த சந்தோசங்களையும் வளங்களையும் கொண்டுவரவேண்டுமென புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்த நிகழ்வில் உதவிப் பிரதேசசெயலாளர் பசுபதி தயானந்தன் கணக்காளர் ம.சிவகுமாரன் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் செ.சுபச்செல்வன், நிர்வாக உத்தியோகத்தர் மா.முரளி, நிர்வாக கிராம அலுவலர் சோ.சிவலிங்கம், தலைமைப்பீட  சமுர்த்தி முகாமையாளர் அ.ரவிச்சந்திரன் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள், மற்றும் செயலக உத்தியோகத்தர்கள், கிராமஅலுவலர்கள் கலந்து கொண்டிருந்தனர்.





வடமராட்சி, வடக்கு பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் : புதுவருட கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு 025ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று(01) வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.வருடத்திற்கான முதல்நாள் கடமைகளை ஆரம்பிக்கும் அரச சேவை சத்தியப்பிரமாண நிகழ்வு பிரதேச செயலாளர் சி.சத்தியசீலன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.இதன்போது புதிய ஆண்டினை வரவேற்று தமது கடமைகளை ஆரம்பிக்கும் முகமாக இன்று (01), காலை 8.30 மணிக்கு பிரதேச செயலாளரால் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்ட பின்னர், தேசிய கீதம் இசைக்கப்பட்டது.தொடர்ந்து நாட்டுக்காக உயிர் நீத்தவர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, உத்தியோகத்தர்கள் அனைவரும் ‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) திட்டத்துடன் இணைக்கப்பட்ட உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.மேலும், அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் நடைபெற்றது "க்ளீன் ஸ்ரீலங்கா" தேசிய வேலைத் திட்ட நிகழ்வில் உத்தியோகத்தர்கள் நேரலை ஊடக இணைந்திருந்தனர்.நிகழ்வில் பிரதேசசெயலாளர் சி.சத்தியசீலன் அவர்கள் 2025 ஆம் ஆண்டிற்கான கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து சிறப்புரை ஆற்றியிருந்ததுடன் இந்த வருடம் அனைவரது வாழ்வில் மிகுந்த சந்தோசங்களையும் வளங்களையும் கொண்டுவரவேண்டுமென புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.இந்த நிகழ்வில் உதவிப் பிரதேசசெயலாளர் பசுபதி தயானந்தன் கணக்காளர் ம.சிவகுமாரன் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் செ.சுபச்செல்வன், நிர்வாக உத்தியோகத்தர் மா.முரளி, நிர்வாக கிராம அலுவலர் சோ.சிவலிங்கம், தலைமைப்பீட  சமுர்த்தி முகாமையாளர் அ.ரவிச்சந்திரன் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள், மற்றும் செயலக உத்தியோகத்தர்கள், கிராமஅலுவலர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement