பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நேரடியாகப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ள போதிலும், கம்பனிகள் தான்தோன்றித் தனமாகவே செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
எனவே, தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார இவ்விடயத்தில் நேரடியாகத் தலையிட்டு தீர்வினைப் பெற்றுத் தர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முதலாளிமார் சம்மேளனத்துக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவடைந்து 2 மாதங்களாகின்றன.
ஆனால் இவ்விடயத்தில் பெருந்தோட்டக் கம்பனிகள் தான்தோன்றித் தனமாகவே செயற்பட்டு வருகிறது.
எனவே, இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
கம்பனிகளை சம்பள நிர்ணயச்சபைக்கு அழைத்து தீர்வினை வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
சம்பள விவகாரத்தில் கம்பனிகள் தான்தோன்றித்தனம் - வடிவேல் சுரேஷ் குற்றச்சாட்டு பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நேரடியாகப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ள போதிலும், கம்பனிகள் தான்தோன்றித் தனமாகவே செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.எனவே, தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார இவ்விடயத்தில் நேரடியாகத் தலையிட்டு தீர்வினைப் பெற்றுத் தர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முதலாளிமார் சம்மேளனத்துக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவடைந்து 2 மாதங்களாகின்றன.ஆனால் இவ்விடயத்தில் பெருந்தோட்டக் கம்பனிகள் தான்தோன்றித் தனமாகவே செயற்பட்டு வருகிறது.எனவே, இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.கம்பனிகளை சம்பள நிர்ணயச்சபைக்கு அழைத்து தீர்வினை வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.