• Jun 28 2024

காதலர் தினத்தில் ஏற்பட்ட துயரம் - காதலியால் காதலன் எடுத்த விபரீத முடிவு..! இலங்கையில் சோகம்

Chithra / Feb 15th 2024, 9:28 am
image

Advertisement

இறக்குவானை பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில், காதலர் தினமான நேற்று, 21 வயதுடைய இளைஞன், தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

தனது  காதலியால் ஏற்பட்ட மனவேதனையால் இளைஞன் ஒருவர் உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.

இறக்குவானையை  21 வயதுடைய இளைஞனே மேற்படி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

உயிரிழந்த இளைஞனின் தாயார் வெளிநாட்டிலும் அவரது தந்தை கொழும்பில்  பணிபுரிந்து வருவதாகவும், குறித்த இளைஞன் தனது  இரு சகோதரிகளுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார்.  இந்த நிலையிலேயே நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

இளைஞனின் திடீர் மரணம் தொடர்பில் அவரது உறவினர்கள் திடீர் மரண விசாரணை அதிகாரியிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

அதாவது, குறித்த இளைஞன், யுவதி ஒருவருடன் காதல் தொடர்பில் இருந்ததாகவும், சம்பவத்திற்கு முந்தினம் இரவு தனது காதலியுடன் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும் உறவினர்  தெரிவித்தார். 

அந்த அழைப்பின் பின்னர் சகோதரர் சத்தமாக அழுததாகவும், நாளை காதலர் தினத்தை கொண்டாட இறக்குவானைக்கு வருமாறு தனது காதலியை இளைஞன் பலமுறை அழைப்பதை கேட்டதாகவும் அவரது சகோதரி  தெரிவித்தார்.

இந்தநிலையில், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கஹவத்தை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு மரண விசாரணை அதிகாரி உத்தரவிட்டார்.

https://fb.watch/qdn0GUuj5H/

காதலர் தினத்தில் ஏற்பட்ட துயரம் - காதலியால் காதலன் எடுத்த விபரீத முடிவு. இலங்கையில் சோகம் இறக்குவானை பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில், காதலர் தினமான நேற்று, 21 வயதுடைய இளைஞன், தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தனது  காதலியால் ஏற்பட்ட மனவேதனையால் இளைஞன் ஒருவர் உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.இறக்குவானையை  21 வயதுடைய இளைஞனே மேற்படி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்த இளைஞனின் தாயார் வெளிநாட்டிலும் அவரது தந்தை கொழும்பில்  பணிபுரிந்து வருவதாகவும், குறித்த இளைஞன் தனது  இரு சகோதரிகளுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார்.  இந்த நிலையிலேயே நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இளைஞனின் திடீர் மரணம் தொடர்பில் அவரது உறவினர்கள் திடீர் மரண விசாரணை அதிகாரியிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.அதாவது, குறித்த இளைஞன், யுவதி ஒருவருடன் காதல் தொடர்பில் இருந்ததாகவும், சம்பவத்திற்கு முந்தினம் இரவு தனது காதலியுடன் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும் உறவினர்  தெரிவித்தார். அந்த அழைப்பின் பின்னர் சகோதரர் சத்தமாக அழுததாகவும், நாளை காதலர் தினத்தை கொண்டாட இறக்குவானைக்கு வருமாறு தனது காதலியை இளைஞன் பலமுறை அழைப்பதை கேட்டதாகவும் அவரது சகோதரி  தெரிவித்தார்.இந்தநிலையில், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கஹவத்தை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு மரண விசாரணை அதிகாரி உத்தரவிட்டார்.https://fb.watch/qdn0GUuj5H/

Advertisement

Advertisement

Advertisement