• Nov 28 2024

நானுஓயா ரதெல்லவில் வேனும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்து : ஒருவர் பலி 18 பேர் காயம்

Tharmini / Nov 2nd 2024, 1:24 pm
image

நானுஓயா ரதெல்ல குறுக்கு வீதியில் வேனும் லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளனர்.

நுவரெலியா - நானுஓயா ரதெல்ல குறுக்கு வீதியில் வேனும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் வேனில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (01) இரவு 7 மணியளவில் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா ரதெல்ல குறுக்கு வீதியில் சமர்செட் தோட்டப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கல்முனைப் பகுதியைச் சேர்ந்த அனிதா மொஹமட் அல்சார் (வயது 53) என்பவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.

கல்முனை சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த சிலர் நுவரெலியா நோக்கி பயணித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது, வேனில் 18 பேர் பயணித்துள்ளதுடன், லொறியில் சாரதி மற்றும் உதவியாளர், பயணித்துள்ளதாகவும், எனினும், லொறியின் சாரதி மாத்திரமே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், விபத்தில் வேனும் லொறியும் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.





நானுஓயா ரதெல்லவில் வேனும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்து : ஒருவர் பலி 18 பேர் காயம் நானுஓயா ரதெல்ல குறுக்கு வீதியில் வேனும் லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளனர்.நுவரெலியா - நானுஓயா ரதெல்ல குறுக்கு வீதியில் வேனும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் வேனில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விபத்து நேற்று (01) இரவு 7 மணியளவில் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா ரதெல்ல குறுக்கு வீதியில் சமர்செட் தோட்டப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.கல்முனைப் பகுதியைச் சேர்ந்த அனிதா மொஹமட் அல்சார் (வயது 53) என்பவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.கல்முனை சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த சிலர் நுவரெலியா நோக்கி பயணித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.விபத்தின் போது, வேனில் 18 பேர் பயணித்துள்ளதுடன், லொறியில் சாரதி மற்றும் உதவியாளர், பயணித்துள்ளதாகவும், எனினும், லொறியின் சாரதி மாத்திரமே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.விபத்தில் காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், விபத்தில் வேனும் லொறியும் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement