• Feb 10 2025

முல்லைத்தீவுக்கு வருகை தரவுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய..!

Sharmi / Nov 2nd 2024, 1:12 pm
image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் தேசிய மக்கள் சக்தியின் முக்கிய நிகழ்வாக, “நாட்டைக் கட்டியெழுப்பும், நாம் ஒன்றாக திசைகாட்டிக்கு” எனும் கருப்பொருளில் மாபெரும் பொதுக்கூட்டம் நாளைமறுதினம் மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்திற்கு சிறப்பு அதிதியாக பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்து கொள்வதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

புதுக்குடியிருப்பில் உள்ள பேருந்து தரிப்பிடம் நிகழ்விற்கான முக்கிய இடமாகத் தேர்வு செய்யப்பட்டு புதுக்குடியிருப்பு பேருந்து நிலையத்தில் நிகழ்வை விளம்பரப்படுத்தும் பதாகைகள் மற்றும் போஸ்டர்கள் பரவலாக ஒட்டப்பட்டு காணப்படுவதோடு குறித்த பகுதியினை புதுக்குடியிருப்பு பிரதேச சபையினர் ஜே.சி.பி வாகனம் மூலம்  துப்பரவு  செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகின்றது.









முல்லைத்தீவுக்கு வருகை தரவுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் தேசிய மக்கள் சக்தியின் முக்கிய நிகழ்வாக, “நாட்டைக் கட்டியெழுப்பும், நாம் ஒன்றாக திசைகாட்டிக்கு” எனும் கருப்பொருளில் மாபெரும் பொதுக்கூட்டம் நாளைமறுதினம் மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.இந்த கூட்டத்திற்கு சிறப்பு அதிதியாக பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்து கொள்வதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பில் உள்ள பேருந்து தரிப்பிடம் நிகழ்விற்கான முக்கிய இடமாகத் தேர்வு செய்யப்பட்டு புதுக்குடியிருப்பு பேருந்து நிலையத்தில் நிகழ்வை விளம்பரப்படுத்தும் பதாகைகள் மற்றும் போஸ்டர்கள் பரவலாக ஒட்டப்பட்டு காணப்படுவதோடு குறித்த பகுதியினை புதுக்குடியிருப்பு பிரதேச சபையினர் ஜே.சி.பி வாகனம் மூலம்  துப்பரவு  செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement