• Jul 05 2025

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நீதம் சட்ட இதழ் வெளியீடு!

shanuja / Jul 5th 2025, 5:53 pm
image

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் நீதம் சட்ட இதழின் வெளியீட்டு விழா,  கைலாசாபதி கலையரங்கில் ஜூலை 12 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30  மணிக்கு  நடைபெறவுள்ளது.  


யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறை மற்றும்  சட்ட மாணவர் சங்கம் இணைந்து குறித்த இதழ் வெளீயீட்டு விழாவை ஏற்பாடு செய்துள்ளனர்.


நிகழ்வில் பிரதம விருந்தினராக உயர் நீதிமன்ற நீதியரசர் குமுதினி விக்கிரமசிங்கே,கௌரவ விருந்தினராக யாழ்ப்பாணம் சிவில் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன்  ஆகியோர்  பங்கேற்கவுள்ளனர்.


அத்துடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறீசற்குணராஜா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறை தலைவர் கோசலை மதன் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்னர். 


யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறை மாணவர்களால் ஒவ்வொரு ஆண்டும் நீதம் இதழ் வெளியிடப்பட்டு வருவதுடன் இம்முறை ஒன்பதாவது தடவையாக வெளியிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நீதம் சட்ட இதழ் வெளியீடு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் நீதம் சட்ட இதழின் வெளியீட்டு விழா,  கைலாசாபதி கலையரங்கில் ஜூலை 12 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30  மணிக்கு  நடைபெறவுள்ளது.  யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறை மற்றும்  சட்ட மாணவர் சங்கம் இணைந்து குறித்த இதழ் வெளீயீட்டு விழாவை ஏற்பாடு செய்துள்ளனர்.நிகழ்வில் பிரதம விருந்தினராக உயர் நீதிமன்ற நீதியரசர் குமுதினி விக்கிரமசிங்கே,கௌரவ விருந்தினராக யாழ்ப்பாணம் சிவில் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன்  ஆகியோர்  பங்கேற்கவுள்ளனர்.அத்துடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறீசற்குணராஜா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறை தலைவர் கோசலை மதன் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்னர். யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறை மாணவர்களால் ஒவ்வொரு ஆண்டும் நீதம் இதழ் வெளியிடப்பட்டு வருவதுடன் இம்முறை ஒன்பதாவது தடவையாக வெளியிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement