• Jul 06 2025

கிண்ணியா கழிவு முகாமைத்துவ நிலையத்திற்கு நகரசபைத் தவிசாளர் களவிஜயம்!

shanuja / Jul 5th 2025, 10:02 pm
image

கிண்ணியா நகர சபைக்குச் சொந்தமான கழிவு முகாமைத்துவ நிலையத்திற்கு நகர சபையின்  தவிசாளர் எம்.எம்.மஹ்தி , பிரதி தவிசாளர் அப்துல் அஸீஸ் மற்றும்  உறுப்பினர்கள்  இன்று  (05)  கள விஜயம் மேற்கொண்டனர்.


கிண்ணியா நகர சபைக்கு சொந்தமான கழிவு முகாமைத்துவ நிலையத்திற்கு   விஜயம்  மேற்கொள்ள வேண்டும்  என கடந்த நகர சபை அமர்வில் தீர்மானிக்கப்பட்டிருந்ததற்கு இணங்க இன்று தவிசாளர் தலைமையில் கள விஜயம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.


அதனடிப்படையில் வாகனங்கள்,தையல் இயந்திரங்கள், ஏனைய கருவிகள், பொருட்கள் குறித்தும் கழிவுகளை மீள் சுழற்சி செய்தல், கழிவு முகாமைத்துவ நிலையத்திற்கு யானை வேலி அமைத்தல், மின் குமிழ்களை பொருத்துதல், இந்து மயானத்திற்கு ஏற்படுகின்ற இடையூறுகளை குறைத்தல், நீர் இணைப்பு மின்னிணைப்பை பெற்றுக்கொடுத்தல் போன்ற பல்வேறு விடயங்கள் பற்றி அங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன.


அதன் அடிப்படையில் மேற் கூறப்பட்ட விடையங்களை மேம்படுத்துதல், வாகனங்கள் மற்றும் இயந்திரங்களை பழுது பார்த்தல், அவற்றை பாதுகாத்தல் தொடர்பாகவும் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

கிண்ணியா கழிவு முகாமைத்துவ நிலையத்திற்கு நகரசபைத் தவிசாளர் களவிஜயம் கிண்ணியா நகர சபைக்குச் சொந்தமான கழிவு முகாமைத்துவ நிலையத்திற்கு நகர சபையின்  தவிசாளர் எம்.எம்.மஹ்தி , பிரதி தவிசாளர் அப்துல் அஸீஸ் மற்றும்  உறுப்பினர்கள்  இன்று  (05)  கள விஜயம் மேற்கொண்டனர்.கிண்ணியா நகர சபைக்கு சொந்தமான கழிவு முகாமைத்துவ நிலையத்திற்கு   விஜயம்  மேற்கொள்ள வேண்டும்  என கடந்த நகர சபை அமர்வில் தீர்மானிக்கப்பட்டிருந்ததற்கு இணங்க இன்று தவிசாளர் தலைமையில் கள விஜயம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.அதனடிப்படையில் வாகனங்கள்,தையல் இயந்திரங்கள், ஏனைய கருவிகள், பொருட்கள் குறித்தும் கழிவுகளை மீள் சுழற்சி செய்தல், கழிவு முகாமைத்துவ நிலையத்திற்கு யானை வேலி அமைத்தல், மின் குமிழ்களை பொருத்துதல், இந்து மயானத்திற்கு ஏற்படுகின்ற இடையூறுகளை குறைத்தல், நீர் இணைப்பு மின்னிணைப்பை பெற்றுக்கொடுத்தல் போன்ற பல்வேறு விடயங்கள் பற்றி அங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன.அதன் அடிப்படையில் மேற் கூறப்பட்ட விடையங்களை மேம்படுத்துதல், வாகனங்கள் மற்றும் இயந்திரங்களை பழுது பார்த்தல், அவற்றை பாதுகாத்தல் தொடர்பாகவும் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

Advertisement

Advertisement

Advertisement