குருணாகல் நிக்கவரெட்டிய மானிகம வனப்பகுதியில் சுற்றித்திரிந்த “பஹட்டியா” என்ற யானை ஒன்று நீர் நிரம்பிய குழியில் தவறி விழுந்துள்ளது.
சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த யானை குறித்த நீரில் தவறி விழுந்துள்ளது.
நீர் நிரம்பிய குழியில் விழுந்த யானையை பாதுகாப்பதற்காக இராணுவ வீரர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
“பஹட்டியா” யானையின் தலை நீரில் மூழ்காமல் இருப்பதற்காக யானையின் தலையை சுற்றி மணல் மூட்டைகள் போடப்பட்டுள்ளன.
அத்துடன், யானையை வெயிலிருந்து பாதுகாப்பதற்காக யானையை சுற்றி துணியினால் கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது.
நீர் நிரம்பிய குழியில் விழுந்த யானைக்கு இராணுவ வீரர்கள் உணவும் வழங்கியுள்ளனர். வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்கள் இணைந்து யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நீர் குழியில் தவறி விழுந்த யானை குருணாகல் நிக்கவரெட்டிய மானிகம வனப்பகுதியில் சுற்றித்திரிந்த “பஹட்டியா” என்ற யானை ஒன்று நீர் நிரம்பிய குழியில் தவறி விழுந்துள்ளது.சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த யானை குறித்த நீரில் தவறி விழுந்துள்ளது. நீர் நிரம்பிய குழியில் விழுந்த யானையை பாதுகாப்பதற்காக இராணுவ வீரர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.“பஹட்டியா” யானையின் தலை நீரில் மூழ்காமல் இருப்பதற்காக யானையின் தலையை சுற்றி மணல் மூட்டைகள் போடப்பட்டுள்ளன.அத்துடன், யானையை வெயிலிருந்து பாதுகாப்பதற்காக யானையை சுற்றி துணியினால் கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது.நீர் நிரம்பிய குழியில் விழுந்த யானைக்கு இராணுவ வீரர்கள் உணவும் வழங்கியுள்ளனர். வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்கள் இணைந்து யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.