குருவிட்ட, எரத்ன லசகந்த வளைவு பகுதியில் இன்று (03) பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் சுமார் 12 பேர் காயமடைந்துள்ளதாக குருவிட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று காலை 6 மணியளவில் நிகழ்ந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்களில் இருவர் இரத்தினபுரி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும், இருவரை இரத்தினபுரி பொது வைத்தியசாலைக்கு அனுப்ப வேண்டியிருந்தாலும், வேறொரு வைத்தியசாலையிலிருந்து ஆம்பியூலன்ஸ் வரவழைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் கோர விபத்து; 12 பேர் வைத்தியசாலையில் அனுமதி குருவிட்ட, எரத்ன லசகந்த வளைவு பகுதியில் இன்று (03) பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் சுமார் 12 பேர் காயமடைந்துள்ளதாக குருவிட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த விபத்து இன்று காலை 6 மணியளவில் நிகழ்ந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர்.காயமடைந்தவர்கள் எரத்ன பிராந்திய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன்,அவர்களில் இருவர் இரத்தினபுரி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.மேலும், இருவரை இரத்தினபுரி பொது வைத்தியசாலைக்கு அனுப்ப வேண்டியிருந்தாலும், வேறொரு வைத்தியசாலையிலிருந்து ஆம்பியூலன்ஸ் வரவழைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.