• Jun 24 2026

முச்சக்கர வண்டியை மோதி கட்டிடத்துக்குள் பாய்ந்த வேன்! நூலிழையில் தப்பிய 10 உயிர்கள்; ஐவர் வைத்தியசாலையில்

Chithra / Jun 24th 2026, 6:38 pm
image


புத்தளம் தில்லையடி  பகுதியில் இன்று (24) பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் ஐந்து பேர் காயமடைந்து புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


அனுராதபுரத்தில் வழிபாட்டு நிகழ்வில் பங்கேற்றுவிட்டு நீர்கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்றே இந்த விபத்தில் சிக்கியுள்ளது. குறித்த வேனை பெண் ஒருவர் செலுத்திச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


பொலிஸ் விசாரணைகளின்படி, தில்லையடி  பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஒரு மோட்டார் சைக்கிள்  வீதியைக் கடந்து எதிர்திசைக்கு சென்றுள்ளது. அதனைத் தவிர்க்க முயன்ற வேன் சாரதி வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், முதலில் முச்சக்கர வண்டி ஒன்றில் மோதியதுடன், பின்னர்  வீதியின் மறுபுறத்தில் அமைந்திருந்த கட்டிடம் ஒன்றுக்குள் புகுந்துள்ளது.


விபத்தின் போது வேனில் பயணித்த ஆறு பேரின் உயிர்கள் ஆபத்தான சூழ்நிலையிலிருந்து தப்பியதாகவும், கட்டிடத்திற்குள் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் மற்றும் அங்கிருந்த பொதுமக்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


வேன் கட்டிடத்தின் முன்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி அமைப்புகளை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்ததாகவும், சம்பவ நேரத்தில் ஊழியர் ஒருவர் சில அடிகள் தூரத்தில் மேசையில் ஆவணங்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்ததாகவும் பொலிஸார் கூறினர். அவர் இருந்த பகுதியின் கண்ணாடி அமைப்புகள் முற்றிலும் சேதமடைந்துள்ள நிலையில், கண்ணாடி துண்டுகள் நேரடியாக பட்டிருந்தால் பாரிய உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் மற்றும் வேனில் இருந்த இருவர் என மொத்தம் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். பொலிஸ் தகவல்களின்படி, இந்த விபத்தில் குறைந்தது 10 பேரின் உயிர்கள் நூலிழையில் காப்பாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முச்சக்கர வண்டியை மோதி கட்டிடத்துக்குள் பாய்ந்த வேன் நூலிழையில் தப்பிய 10 உயிர்கள்; ஐவர் வைத்தியசாலையில் புத்தளம் தில்லையடி  பகுதியில் இன்று (24) பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் ஐந்து பேர் காயமடைந்து புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அனுராதபுரத்தில் வழிபாட்டு நிகழ்வில் பங்கேற்றுவிட்டு நீர்கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்றே இந்த விபத்தில் சிக்கியுள்ளது. குறித்த வேனை பெண் ஒருவர் செலுத்திச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.பொலிஸ் விசாரணைகளின்படி, தில்லையடி  பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஒரு மோட்டார் சைக்கிள்  வீதியைக் கடந்து எதிர்திசைக்கு சென்றுள்ளது. அதனைத் தவிர்க்க முயன்ற வேன் சாரதி வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், முதலில் முச்சக்கர வண்டி ஒன்றில் மோதியதுடன், பின்னர்  வீதியின் மறுபுறத்தில் அமைந்திருந்த கட்டிடம் ஒன்றுக்குள் புகுந்துள்ளது.விபத்தின் போது வேனில் பயணித்த ஆறு பேரின் உயிர்கள் ஆபத்தான சூழ்நிலையிலிருந்து தப்பியதாகவும், கட்டிடத்திற்குள் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் மற்றும் அங்கிருந்த பொதுமக்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.வேன் கட்டிடத்தின் முன்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி அமைப்புகளை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்ததாகவும், சம்பவ நேரத்தில் ஊழியர் ஒருவர் சில அடிகள் தூரத்தில் மேசையில் ஆவணங்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்ததாகவும் பொலிஸார் கூறினர். அவர் இருந்த பகுதியின் கண்ணாடி அமைப்புகள் முற்றிலும் சேதமடைந்துள்ள நிலையில், கண்ணாடி துண்டுகள் நேரடியாக பட்டிருந்தால் பாரிய உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் மற்றும் வேனில் இருந்த இருவர் என மொத்தம் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். பொலிஸ் தகவல்களின்படி, இந்த விபத்தில் குறைந்தது 10 பேரின் உயிர்கள் நூலிழையில் காப்பாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement