• Mar 26 2026

வன்னி வீடுகள் 3 ஆண்டில் நிறைவு – ரவிகரனின் கேள்விக்கு பிரதி அமைச்சர் சரத் பதில்!

shanu / Mar 24th 2026, 3:39 pm
image

கடந்த நல்லாட்சி அரசின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டு இடைநடுவே கைவிடப்பட்டுள்ள வீடுகள் தொடர்பாக வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி.சரத்திடம் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியதுடன், குறித்த வீடுகளை முழுமைப்படுத்த விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்குள் முழுமைப்படுத்தப்படாத அனைத்து வீடுகளையும் கட்டி முடிப்பதற்குமான வேலைத்திட்டத்தை தயாரித்துள்ளதாகவும், ஒரு முறையான வேலைத்திட்டத்தின்மூலம் இப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி.சரத் இதன்போது பதிலளித்துள்ளார்.

கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினா நேரத்திலேயே இவ்விடயம் தொடர்பில் சேப்பட்டுள்ளது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் கட்டப்பட்ட வீடுகள் இடை நடுவே கைவிடப்பட்டுக் காணப்படுகின்றன.

இறுதி யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மிகவும் நொந்துபோயுள்ள வன்னி மக்கள் இதனால் பாரிய இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இவ்வாறாக வறுமையில் வாடிக்கொண்டிருந்த அந்த மக்களுக்கு வழங்கப்பட்ட வீடுகள் தற்போதும் முழுமைப்படுத்தப்படாமல் காணப்படுகின்றன.

இத்தகைய சூழலில் முழுமைப்படுத்தப்படாத தமது வீடுகளை விரைவாக முழுமைப்படுத்தித்தருமாறு மக்கள் தொடர்ச்சியாக எம்மிடம் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

இந்நிலையில் சிலர் பலத்த இடர்பாடுகளுக்கு மத்தியில் கடனாக பணத்தைப் பெற்று வீட்டுக் கட்டுமானப் பணிகளை முழுமைப்படுத்தியுள்ளனர்.

அந்தவீடுகளை முழுமைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதை பிரதி அமைச்சர் என்ற வகையில் தாம் பதிலளிக்கவேண்டும்.

தங்களுடைய அரசாங்கத்தின் காலத்தில் அந்த வீடுகள் முழுமைப்படுத்திக் கொடுக்கப்படுமென நாம் நம்புகின்றோம். மக்களும் நம்புகின்றனர்.

எனவே தயவுசெய்து விரைவாக அந்த வீடுகளை முழுயைப்படுத்திக் கொடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன். இதற்கான பதிலை தங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றேன் - என்றார்.

இதன்போது பிரதியமைச்சர் டி.பி.சரத் பதிலளிக்கையில்,

இந்த வருடம் வடக்கு கிழக்கில் மீள்குடியேற்ற வீடுகளுக்காக 2,500 வீடுகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒரு வீட்டிற்கு வழங்கப்பட்ட 9 இலட்சம் மற்றும் 15 இலட்சத்திற்குப் பதிலாக, ஜனாதிபதி அவர்கள் விசேட கவனம் செலுத்தி, அந்தப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு 10 இலட்சம் அல்லாமல் 20 இலட்சம் வழங்குமாறு எமக்கு அறிவித்துள்ளார்.

அதற்கமைய, ஒரு வீட்டிற்கு 20 இலட்சம் வீதம் வழங்கி, 2,500 மீள்குடியேற்ற வீடுகளை அமைப்பதற்கும், எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்குள் அந்தந்த பகுதிகளில் எஞ்சியுள்ள அனைத்து வீடுகளையும் கட்டி முடிப்பதற்குமான வேலைத்திட்டத்தை வட மாகாணத்தில் நாம் தயாரித்துள்ளோம்.

அதேபோல், வன்னிப் பகுதியிலும் அந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கான நிதியை நாம் ஒதுக்கியுள்ளோம். எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்குள் வடக்கு கிழக்கில் காணப்படும் இப்பிரச்சினைக்கு ஒரு முறையான வேலைத்திட்டத்தின் கீழ் முழுமையான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்றது - என்றார்.

வன்னி வீடுகள் 3 ஆண்டில் நிறைவு – ரவிகரனின் கேள்விக்கு பிரதி அமைச்சர் சரத் பதில் கடந்த நல்லாட்சி அரசின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டு இடைநடுவே கைவிடப்பட்டுள்ள வீடுகள் தொடர்பாக வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி.சரத்திடம் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியதுடன், குறித்த வீடுகளை முழுமைப்படுத்த விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளார்.இந்நிலையில் எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்குள் முழுமைப்படுத்தப்படாத அனைத்து வீடுகளையும் கட்டி முடிப்பதற்குமான வேலைத்திட்டத்தை தயாரித்துள்ளதாகவும், ஒரு முறையான வேலைத்திட்டத்தின்மூலம் இப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி.சரத் இதன்போது பதிலளித்துள்ளார்.கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினா நேரத்திலேயே இவ்விடயம் தொடர்பில் சேப்பட்டுள்ளது.இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் கட்டப்பட்ட வீடுகள் இடை நடுவே கைவிடப்பட்டுக் காணப்படுகின்றன.இறுதி யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மிகவும் நொந்துபோயுள்ள வன்னி மக்கள் இதனால் பாரிய இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.இவ்வாறாக வறுமையில் வாடிக்கொண்டிருந்த அந்த மக்களுக்கு வழங்கப்பட்ட வீடுகள் தற்போதும் முழுமைப்படுத்தப்படாமல் காணப்படுகின்றன.இத்தகைய சூழலில் முழுமைப்படுத்தப்படாத தமது வீடுகளை விரைவாக முழுமைப்படுத்தித்தருமாறு மக்கள் தொடர்ச்சியாக எம்மிடம் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.இந்நிலையில் சிலர் பலத்த இடர்பாடுகளுக்கு மத்தியில் கடனாக பணத்தைப் பெற்று வீட்டுக் கட்டுமானப் பணிகளை முழுமைப்படுத்தியுள்ளனர்.அந்தவீடுகளை முழுமைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதை பிரதி அமைச்சர் என்ற வகையில் தாம் பதிலளிக்கவேண்டும்.தங்களுடைய அரசாங்கத்தின் காலத்தில் அந்த வீடுகள் முழுமைப்படுத்திக் கொடுக்கப்படுமென நாம் நம்புகின்றோம். மக்களும் நம்புகின்றனர்.எனவே தயவுசெய்து விரைவாக அந்த வீடுகளை முழுயைப்படுத்திக் கொடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன். இதற்கான பதிலை தங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றேன் - என்றார்.இதன்போது பிரதியமைச்சர் டி.பி.சரத் பதிலளிக்கையில்,இந்த வருடம் வடக்கு கிழக்கில் மீள்குடியேற்ற வீடுகளுக்காக 2,500 வீடுகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒரு வீட்டிற்கு வழங்கப்பட்ட 9 இலட்சம் மற்றும் 15 இலட்சத்திற்குப் பதிலாக, ஜனாதிபதி அவர்கள் விசேட கவனம் செலுத்தி, அந்தப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு 10 இலட்சம் அல்லாமல் 20 இலட்சம் வழங்குமாறு எமக்கு அறிவித்துள்ளார்.அதற்கமைய, ஒரு வீட்டிற்கு 20 இலட்சம் வீதம் வழங்கி, 2,500 மீள்குடியேற்ற வீடுகளை அமைப்பதற்கும், எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்குள் அந்தந்த பகுதிகளில் எஞ்சியுள்ள அனைத்து வீடுகளையும் கட்டி முடிப்பதற்குமான வேலைத்திட்டத்தை வட மாகாணத்தில் நாம் தயாரித்துள்ளோம்.அதேபோல், வன்னிப் பகுதியிலும் அந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கான நிதியை நாம் ஒதுக்கியுள்ளோம். எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்குள் வடக்கு கிழக்கில் காணப்படும் இப்பிரச்சினைக்கு ஒரு முறையான வேலைத்திட்டத்தின் கீழ் முழுமையான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்றது - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement