• Dec 11 2024

வரணி நூலகத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான- தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழா !

Tharmini / Nov 9th 2024, 12:14 pm
image

சாவகச்சேரி பிரதேச சபை வரணி நூலகத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழா இன்று (09) இடம்பெற்றது.

வரணியில் அமைந்துள்ள தென்மராட்சி கலாசார மத்திய நிலையத்தில் சாவகச்சேரி பிரதேசசபை செயலாளர் கதிர்காமநாதன் சந்திரகுமார் தலைமையில் இன்று (11) காலை 10 மணிக்கு இடம்பெற்ற இந்த நிகழ்வில்,

ஹரி குழும நிறுவனங்களின் நிறைவேற்றுப்பணிப்பாளர் சோமசுந்தரம் யாதவன், பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்திருந்தார். 

அத்துடன் யா.வரணி மத்திய கல்லூரி பிரதி அதிபர் தெ.செந்தூரன் அவர்களும், கரம்பைக்குறிச்சி கிராம அலுவலர் ம.தீபா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து சிறப்பித்திருந்ததுடன் கெளரவ விருந்தினராக சமூக செயற்பாட்டாளர் திரு.சி. பரஞ்சோதி அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.

இன்றைய நிகழ்வில் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் போட்டிகளில் பங்கு பற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன் வீட்டு நூலகப் போட்டியில் வெற்றி பெற்றவர்களை கெளரவித்து பரிசுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.








வரணி நூலகத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான- தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழா சாவகச்சேரி பிரதேச சபை வரணி நூலகத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழா இன்று (09) இடம்பெற்றது.வரணியில் அமைந்துள்ள தென்மராட்சி கலாசார மத்திய நிலையத்தில் சாவகச்சேரி பிரதேசசபை செயலாளர் கதிர்காமநாதன் சந்திரகுமார் தலைமையில் இன்று (11) காலை 10 மணிக்கு இடம்பெற்ற இந்த நிகழ்வில், ஹரி குழும நிறுவனங்களின் நிறைவேற்றுப்பணிப்பாளர் சோமசுந்தரம் யாதவன், பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்திருந்தார். அத்துடன் யா.வரணி மத்திய கல்லூரி பிரதி அதிபர் தெ.செந்தூரன் அவர்களும், கரம்பைக்குறிச்சி கிராம அலுவலர் ம.தீபா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து சிறப்பித்திருந்ததுடன் கெளரவ விருந்தினராக சமூக செயற்பாட்டாளர் திரு.சி. பரஞ்சோதி அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.இன்றைய நிகழ்வில் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் போட்டிகளில் பங்கு பற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.அத்துடன் வீட்டு நூலகப் போட்டியில் வெற்றி பெற்றவர்களை கெளரவித்து பரிசுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

Advertisement

Advertisement

Advertisement