ஈழத்து சௌந்தரராஜன் என்று அழைக்கப்பட்ட யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலை பிறப்படமாகவும் வதிவிடமாகவும் கொண்ட வைரவிப்பிள்ளை விஜயரட்ணம் தனது 81 வது வயதில் நேற்றையதினம்(08) காலமானர்.
1943 ஆம் ஆண்டு பிறந்த விஜயரட்ணம் ஈழத்தின் மிகச் சிறந்த பாடகர் ஆவார்.
கிராமிய பாடல்களாக இருந்தாலும் சரி, திரையிசை பாடல்களாக இருந்தாலும் சரி, பக்தி பாடல்களாக இருந்தாலும் சரி இனிமையான குரலில் பாடி பலரையும் மகிழ்வூட்டி வந்த விஜயரட்ணத்தின் இழப்பு ஈழத்து கலைஞர்களுக்கும் அவரது ரசிகர்களுக்கும் பேரிழப்பாகும்.
1980களில் தென்னிந்திய பாடகரான டாக்டர் சௌந்தர்ராஜன் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய திருவிழாவில் இசைக் கச்சேரி நடாத்துவதற்காக வருக வந்த போது அவருடன் இணைந்து அவரைப் போலவே இனிமையாக பாடி அசத்திய விஜயரட்ணம் அவர்களுக்கு தென்னிந்திய திரைப்பட பாடகரான சௌந்தரராஜன், ஈழத்து சௌந்தர்ராஜன் என்கின்ற பட்டத்தை வழங்கியிருந்தார்.
இதனால்தான் அவர் ஈழத்துச் சௌந்தராஜன் என்று அழைக்கப்பட்டார்.
யாழ்ப்பாணத்தில் குறிப்பாக வடமராட்சி கிழக்கு, வடமராட்சி உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் உள்ள பல ஆலயங்களுக்கு அவர் தனது குரலில் அதிகளவான பாடல்களை பாடியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஈழத்து சௌந்தராஜன் 81 ஆவது வயதில் மறைவு. ஈழத்து சௌந்தரராஜன் என்று அழைக்கப்பட்ட யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலை பிறப்படமாகவும் வதிவிடமாகவும் கொண்ட வைரவிப்பிள்ளை விஜயரட்ணம் தனது 81 வது வயதில் நேற்றையதினம்(08) காலமானர்.1943 ஆம் ஆண்டு பிறந்த விஜயரட்ணம் ஈழத்தின் மிகச் சிறந்த பாடகர் ஆவார். கிராமிய பாடல்களாக இருந்தாலும் சரி, திரையிசை பாடல்களாக இருந்தாலும் சரி, பக்தி பாடல்களாக இருந்தாலும் சரி இனிமையான குரலில் பாடி பலரையும் மகிழ்வூட்டி வந்த விஜயரட்ணத்தின் இழப்பு ஈழத்து கலைஞர்களுக்கும் அவரது ரசிகர்களுக்கும் பேரிழப்பாகும்.1980களில் தென்னிந்திய பாடகரான டாக்டர் சௌந்தர்ராஜன் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய திருவிழாவில் இசைக் கச்சேரி நடாத்துவதற்காக வருக வந்த போது அவருடன் இணைந்து அவரைப் போலவே இனிமையாக பாடி அசத்திய விஜயரட்ணம் அவர்களுக்கு தென்னிந்திய திரைப்பட பாடகரான சௌந்தரராஜன், ஈழத்து சௌந்தர்ராஜன் என்கின்ற பட்டத்தை வழங்கியிருந்தார்.இதனால்தான் அவர் ஈழத்துச் சௌந்தராஜன் என்று அழைக்கப்பட்டார்.யாழ்ப்பாணத்தில் குறிப்பாக வடமராட்சி கிழக்கு, வடமராட்சி உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் உள்ள பல ஆலயங்களுக்கு அவர் தனது குரலில் அதிகளவான பாடல்களை பாடியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.