• Dec 11 2024

திருகோணமலையில் வாக்களிக்கும் உரிமை, சிறுபான்மை இருப்பு தொடர்பான செயலமர்வு !

Tharmini / Nov 9th 2024, 12:32 pm
image

வாக்களிக்கும் உரிமையும், பொதுத் தேர்தலின் முக்கியத்துவமும், தமிழ் பேசும் மக்களின் இருப்பும் எனும் தொணிப் பொருளின்கீழ்,

சிவில் செயற்பாட்டாளர்களுக்கான செயலமர்வு திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இன்று (09) இடம்பெற்றது.

அகம் மனிதாபிமான வள நிலையத்தினால் நடாத்தப்பட்ட இச்செயலமர்வில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள பெண் சிவில் செயற்பாட்டாளர்கள், இளைஞர்,யுவதிகள்,சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் பங்குபற்றியிருந்தனர்.

இதன்போது எமது வாக்கின் முக்கியத்துவம், ஏன் நாம் வாக்களிக்க வேண்டும்,  எப்படியானவர்களுக்கு வாக்களிக்க வேண்டும், அரசியல்வாதிகளின் பொறுப்புக் கூறல், தமிழ் பேசும் மக்களின் இருப்பு சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக விளக்கங்கள் வழங்கப்பட்டு கருத்துக்களும் கேட்டுக் கொள்ளப்பட்டன.

இந் நிகழ்வில் வளவாளராக மனித உரிமை ஆணைக்குழுவின் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்கான பிராந்திய இணைப்பாளர் ஏ.எல்.இஸ்ஸடீன் , அகம் மனிதாபிமான வள நிலையத்தின் இணைப்பாளர் க.லவகுசராசா, பிரதி இணைப்பாளர் அ.மதன் ஆகியோர் கலந்து கொண்டு விளக்கங்களை வழங்கியிருந்தனர். 




திருகோணமலையில் வாக்களிக்கும் உரிமை, சிறுபான்மை இருப்பு தொடர்பான செயலமர்வு வாக்களிக்கும் உரிமையும், பொதுத் தேர்தலின் முக்கியத்துவமும், தமிழ் பேசும் மக்களின் இருப்பும் எனும் தொணிப் பொருளின்கீழ், சிவில் செயற்பாட்டாளர்களுக்கான செயலமர்வு திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இன்று (09) இடம்பெற்றது.அகம் மனிதாபிமான வள நிலையத்தினால் நடாத்தப்பட்ட இச்செயலமர்வில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள பெண் சிவில் செயற்பாட்டாளர்கள், இளைஞர்,யுவதிகள்,சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் பங்குபற்றியிருந்தனர்.இதன்போது எமது வாக்கின் முக்கியத்துவம், ஏன் நாம் வாக்களிக்க வேண்டும்,  எப்படியானவர்களுக்கு வாக்களிக்க வேண்டும், அரசியல்வாதிகளின் பொறுப்புக் கூறல், தமிழ் பேசும் மக்களின் இருப்பு சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக விளக்கங்கள் வழங்கப்பட்டு கருத்துக்களும் கேட்டுக் கொள்ளப்பட்டன.இந் நிகழ்வில் வளவாளராக மனித உரிமை ஆணைக்குழுவின் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்கான பிராந்திய இணைப்பாளர் ஏ.எல்.இஸ்ஸடீன் , அகம் மனிதாபிமான வள நிலையத்தின் இணைப்பாளர் க.லவகுசராசா, பிரதி இணைப்பாளர் அ.மதன் ஆகியோர் கலந்து கொண்டு விளக்கங்களை வழங்கியிருந்தனர். 

Advertisement

Advertisement

Advertisement