• Dec 11 2024

தமிழ்மக்கள் மிக அவதானமாக வாக்களிக்கவேண்டும் - க. சபேசன்

Tharmini / Nov 9th 2024, 12:58 pm
image

12 வீதமுள்ள முஸ்லீம்களுக்கு 2ஆசனமா?, தமிழ்மக்களே சிந்தியுங்கள்! க.சபேசன் கோரிக்கை. 

வன்னியில் 08-12 வீதமுள்ள முஸ்லீம்மக்களுக்கு 2 பாராளுமன்ற் ஆசனங்கள் கிடைக்கின்றது.

80 வீதமுள்ள தமிழ்மக்கள் காலம்காலமாக ஏமாற்றப்படும் ஒரு நிலையே காணப்படுவதாக தமிழர் விடுதலைக்கூட்டணியின் உபதலைவர். க.சபேசன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று (09) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், வன்னியில் தமிழ்மக்கள் இன்று பாரிய ஒரு பிரச்சனைக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலமை ஏற்ப்பட்டுள்ளது.

அது தொடர்பாக மக்களுக்காக செயற்படுகின்றோம் என்று தெரிவிக்கும் எந்த அரசியல்வாதிகளும் பேசமுன்வருவதில்லை. 

குறிப்பாக வன்னிதேர்தல் மாவட்டத்தில் 8-12 வீத முஸ்லீம்களும், 08 வீதமான சிங்களவர்களும் உள்ளனர், 80வீதமானமவர்கள் தமிழர்கள். இந்த நிலைமையில் இங்கு போட்டியிடுகின்ற ஜக்கிய மக்கள் சக்தி 02, 03 ஆசனங்களை பெறும்என்று பலரால் தெரிவிக்கப்படுகின்றது. 

ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு கட்சியில்போட்டியிடும் றிசாட் பதியூதீன் அந்தகட்சியூடாக போட்டியிடுகின்றார். பல முஸ்லீம்களும் போட்டியிடுகின்றனர்.அதுபோல தேசிய மக்கள் சக்தியிலும் முஸ்லீம்கள் போட்டியிடுகின்றனர். 

இங்கு குறைந்தளவிலான வாக்குகளைகொண்டுள்ள முஸ்லீம்கட்சிகளுக்கு 2 ஆசனம் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்கிறது. எனேவ தமிழ்மக்கள் மிக அவதானமாக வாக்களிக்கவேண்டும். காலம் காலமாக ஏமாறும் ஒரு தரப்பாக நாம் இருக்க கூடாது. 

எந்த ஒரு காலத்திலும் முஸ்லீம்மக்கள் தமிழ் மக்களுக்கு வாக்களித்தவரலாறு இல்லை. அதுபோல சிங்களமக்கள் தமிழர்களுக்கு வாக்களித்தவரலாறும் இல்லை. ஆனால் தமிழ்மக்கள் முஸ்லீம்களுக்கும் சிங்களமக்களுக்கும் வாக்களிப்பார்கள். இந்த நிலையை மக்கள்  மாற்றவேண்டும். 

எமது தமிழ் பெண்கள் இன்று பொருளாதார கஸ்ரத்தினால் வீதிகளில் நின்று சுவரொட்டிகளை ஒட்டுகின்றனர். ஒரு முஸ்லீம் பெண்மணி வீதியில் நின்று சுவரொட்டி ஒட்டுவதை யாரும் பார்த்திருக்கிறீர்களா. இது மிகவும் ஒரு துன்பியலானநிகழ்வு. எமது மக்களுக்கு சரியான ஒரு பிரதிநிதித்துவம் இல்லாமையே அதற்கான காரணம்

எனவே இம்முறை தேர்தலில் எமது மக்கள்சிந்தித்து தமிழ்கட்சிகளுக்கு வாக்களிக்கவேண்டும். 

எமது கட்சியான தமிழர்விடுதலை கூட்டணி முரன்பாடுகள் எதுவும் இல்லாமல் உதயசூரியன் என்ற சின்னத்துடன் தொடர்ந்து பயணிக்கின்றது. எனவே ஒற்றுமைக்காக உருவாக்கப்பட்ட எமது சின்னத்துக்கு மக்கள் வாக்களியுங்கள். எமது கட்சியில் இணையுமாறு பலருக்கு நாம் அழைப்பு விடுத்தோம் யாரும் வரவில்லை. நாங்கள் பதவிகளை சுழற்சிமுறையில் வழங்குவதற்கு கூட தயாராக இருக்கிறோம், என்றார்.

தமிழ்மக்கள் மிக அவதானமாக வாக்களிக்கவேண்டும் - க. சபேசன் 12 வீதமுள்ள முஸ்லீம்களுக்கு 2ஆசனமா, தமிழ்மக்களே சிந்தியுங்கள் க.சபேசன் கோரிக்கை. வன்னியில் 08-12 வீதமுள்ள முஸ்லீம்மக்களுக்கு 2 பாராளுமன்ற் ஆசனங்கள் கிடைக்கின்றது. 80 வீதமுள்ள தமிழ்மக்கள் காலம்காலமாக ஏமாற்றப்படும் ஒரு நிலையே காணப்படுவதாக தமிழர் விடுதலைக்கூட்டணியின் உபதலைவர். க.சபேசன் தெரிவித்தார்.வவுனியாவில் இன்று (09) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், வன்னியில் தமிழ்மக்கள் இன்று பாரிய ஒரு பிரச்சனைக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலமை ஏற்ப்பட்டுள்ளது. அது தொடர்பாக மக்களுக்காக செயற்படுகின்றோம் என்று தெரிவிக்கும் எந்த அரசியல்வாதிகளும் பேசமுன்வருவதில்லை. குறிப்பாக வன்னிதேர்தல் மாவட்டத்தில் 8-12 வீத முஸ்லீம்களும், 08 வீதமான சிங்களவர்களும் உள்ளனர், 80வீதமானமவர்கள் தமிழர்கள். இந்த நிலைமையில் இங்கு போட்டியிடுகின்ற ஜக்கிய மக்கள் சக்தி 02, 03 ஆசனங்களை பெறும்என்று பலரால் தெரிவிக்கப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு கட்சியில்போட்டியிடும் றிசாட் பதியூதீன் அந்தகட்சியூடாக போட்டியிடுகின்றார். பல முஸ்லீம்களும் போட்டியிடுகின்றனர்.அதுபோல தேசிய மக்கள் சக்தியிலும் முஸ்லீம்கள் போட்டியிடுகின்றனர். இங்கு குறைந்தளவிலான வாக்குகளைகொண்டுள்ள முஸ்லீம்கட்சிகளுக்கு 2 ஆசனம் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்கிறது. எனேவ தமிழ்மக்கள் மிக அவதானமாக வாக்களிக்கவேண்டும். காலம் காலமாக ஏமாறும் ஒரு தரப்பாக நாம் இருக்க கூடாது. எந்த ஒரு காலத்திலும் முஸ்லீம்மக்கள் தமிழ் மக்களுக்கு வாக்களித்தவரலாறு இல்லை. அதுபோல சிங்களமக்கள் தமிழர்களுக்கு வாக்களித்தவரலாறும் இல்லை. ஆனால் தமிழ்மக்கள் முஸ்லீம்களுக்கும் சிங்களமக்களுக்கும் வாக்களிப்பார்கள். இந்த நிலையை மக்கள்  மாற்றவேண்டும். எமது தமிழ் பெண்கள் இன்று பொருளாதார கஸ்ரத்தினால் வீதிகளில் நின்று சுவரொட்டிகளை ஒட்டுகின்றனர். ஒரு முஸ்லீம் பெண்மணி வீதியில் நின்று சுவரொட்டி ஒட்டுவதை யாரும் பார்த்திருக்கிறீர்களா. இது மிகவும் ஒரு துன்பியலானநிகழ்வு. எமது மக்களுக்கு சரியான ஒரு பிரதிநிதித்துவம் இல்லாமையே அதற்கான காரணம்எனவே இம்முறை தேர்தலில் எமது மக்கள்சிந்தித்து தமிழ்கட்சிகளுக்கு வாக்களிக்கவேண்டும். எமது கட்சியான தமிழர்விடுதலை கூட்டணி முரன்பாடுகள் எதுவும் இல்லாமல் உதயசூரியன் என்ற சின்னத்துடன் தொடர்ந்து பயணிக்கின்றது. எனவே ஒற்றுமைக்காக உருவாக்கப்பட்ட எமது சின்னத்துக்கு மக்கள் வாக்களியுங்கள். எமது கட்சியில் இணையுமாறு பலருக்கு நாம் அழைப்பு விடுத்தோம் யாரும் வரவில்லை. நாங்கள் பதவிகளை சுழற்சிமுறையில் வழங்குவதற்கு கூட தயாராக இருக்கிறோம், என்றார்.

Advertisement

Advertisement

Advertisement