• Sep 20 2024

வவுனியா தொல்லியல் திணைக்களத் துணை ஆணையர் செயதிலகர் பதவி விலக வேண்டும்..! மறவன்புலவு சச்சிதானந்தம் கோரிக்கை..!samugammedia

Sharmi / Jun 13th 2023, 2:28 pm
image

Advertisement

தொல்லியல் திணைக்களத் தலைவர் விலகியதால் சிக்கல் தீராது, வவுனியாத் தொல்லியல் திணைக்களத் துணை ஆணையர் செயதிலகர் பதவி விலக வேண்டும் என மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்தார்.

இன்றையதினம் ஊடகங்களுக்கு அவர் அனுப்பி வைத்த அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,

இந்து, புத்த நல்லிணக்கத்தைக் கெடுத்தவர் செயதிலகர். சிவசேனையில் உள்ள நாங்கள் கூறுகிறோம், வட மாகாணத்தில் தொல்லியல் திணைக்கள அடாவடித்தனங்களுக்கு வவுனியாத் தொல்லியல் துணை ஆணையர் செயதிலகரே காரணம். 

சிவசேனையினர் அவரிடம் சென்று முறையிட்டோம். நல்லிணக்கத்துக்கு இடையூறாக இருக்காதீர்கள் எனக் கோரினோம். சட்டங்களுக்கு அமைய நடப்பேன், யார் சொன்னாலும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்றார்.

இந்து ,புத்த நல்லிணக்கம் உடைந்தாலும் கருதேன் என நேரடியாகவே சிவசேனையிடம் கூறினார்.

குடியரசுத் தலைவர் உடனடியாக அவரையும் இடமாற்றியோ இடைநிறுத்தியோ விசாரணைகளைத் தொடங்க வேண்டும்

குடியரசுத் தலைவரின் இந்து புத்த நல்லிணக்க முயற்சிகளைச் சிவ சேனை பாராட்டுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா தொல்லியல் திணைக்களத் துணை ஆணையர் செயதிலகர் பதவி விலக வேண்டும். மறவன்புலவு சச்சிதானந்தம் கோரிக்கை.samugammedia தொல்லியல் திணைக்களத் தலைவர் விலகியதால் சிக்கல் தீராது, வவுனியாத் தொல்லியல் திணைக்களத் துணை ஆணையர் செயதிலகர் பதவி விலக வேண்டும் என மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்தார்.இன்றையதினம் ஊடகங்களுக்கு அவர் அனுப்பி வைத்த அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,இந்து, புத்த நல்லிணக்கத்தைக் கெடுத்தவர் செயதிலகர். சிவசேனையில் உள்ள நாங்கள் கூறுகிறோம், வட மாகாணத்தில் தொல்லியல் திணைக்கள அடாவடித்தனங்களுக்கு வவுனியாத் தொல்லியல் துணை ஆணையர் செயதிலகரே காரணம். சிவசேனையினர் அவரிடம் சென்று முறையிட்டோம். நல்லிணக்கத்துக்கு இடையூறாக இருக்காதீர்கள் எனக் கோரினோம். சட்டங்களுக்கு அமைய நடப்பேன், யார் சொன்னாலும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்றார்.இந்து ,புத்த நல்லிணக்கம் உடைந்தாலும் கருதேன் என நேரடியாகவே சிவசேனையிடம் கூறினார்.குடியரசுத் தலைவர் உடனடியாக அவரையும் இடமாற்றியோ இடைநிறுத்தியோ விசாரணைகளைத் தொடங்க வேண்டும்குடியரசுத் தலைவரின் இந்து புத்த நல்லிணக்க முயற்சிகளைச் சிவ சேனை பாராட்டுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement