• Dec 27 2024

வவுனியா ஓமந்தையில் கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரால் முற்றுகை!

Tamil nila / Dec 21st 2024, 9:56 pm
image

வவுனியா ஓமந்தை சேமமடு பகுதியில் பலகாலமாக சூட்சுமமாக இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை பொலிஸார் முற்றுகை இட்டுள்ளனர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது

குறித்த கசிப்பு உற்பத்தி நிலையம் தொடர்பாக ஓமந்தை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயத்திலக்க அவர்களின் தலைமையிலான பொலிஸ் குழுவினர் கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டனர் இதன் போது கசிப்பு உற்பத்தி நிலையத்தை நாடத்தி வந்த அதே பகுதியை சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவரை கைது செய்திருந்தனர்


மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 150,000 மில்லி லீற்றர் கோடா மற்றும் 15000மில்லி லீற்றர் வடி ஆகியன மீட்கப்பட்டதுடன் ரூபா ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பெறுமதியான கசிப்பு உற்பத்தி உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன 

சந்தேக நபரை இன்றைய தினம் வவுனியா மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதை அடுத்து எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்

இதேவேளை பல இளைஞர்கள் குறித்த பகுதியில் கசிப்பை அருந்திவிட்டு அப்பிரதேசத்தில் அசம்பாவிதங்களில் ஈடுபடுவதுடன் கடந்த காலங்களில் அப்பகுதியில் உள்ள நீரேந்து பிரதேசங்களிற்கு நீராட சென்று உயிரிழந்தும் உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

வவுனியா ஓமந்தையில் கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரால் முற்றுகை வவுனியா ஓமந்தை சேமமடு பகுதியில் பலகாலமாக சூட்சுமமாக இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை பொலிஸார் முற்றுகை இட்டுள்ளனர்.இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவதுகுறித்த கசிப்பு உற்பத்தி நிலையம் தொடர்பாக ஓமந்தை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயத்திலக்க அவர்களின் தலைமையிலான பொலிஸ் குழுவினர் கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டனர் இதன் போது கசிப்பு உற்பத்தி நிலையத்தை நாடத்தி வந்த அதே பகுதியை சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவரை கைது செய்திருந்தனர்மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 150,000 மில்லி லீற்றர் கோடா மற்றும் 15000மில்லி லீற்றர் வடி ஆகியன மீட்கப்பட்டதுடன் ரூபா ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பெறுமதியான கசிப்பு உற்பத்தி உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன சந்தேக நபரை இன்றைய தினம் வவுனியா மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதை அடுத்து எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்இதேவேளை பல இளைஞர்கள் குறித்த பகுதியில் கசிப்பை அருந்திவிட்டு அப்பிரதேசத்தில் அசம்பாவிதங்களில் ஈடுபடுவதுடன் கடந்த காலங்களில் அப்பகுதியில் உள்ள நீரேந்து பிரதேசங்களிற்கு நீராட சென்று உயிரிழந்தும் உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement