• Nov 26 2024

வவுனியா சிறைச்சாலையில் கைதி மரணம்! - சிறைச்சாலைக்குச் சென்று விசாரணை நடத்திய நீதிபதி

Chithra / Nov 24th 2024, 3:37 pm
image


வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.

நேற்று இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட மேற்படி நபர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் கடந்த 19 ஆம் திகதி முதல் சிறை வைக்கப்பட்டிருந்தார்.

எதிர்வரும் 3 ஆம் திகதி வழக்கு விசாரணை இடம்பெற இருந்த நிலையில் மேற்படி நபர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். வவுனியா, செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த 57 வயதான நபரே மரணமடைந்தவராவார்.

மரணமடைந்தவரின் சடலம் சிறைக்காவலர்களால் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பதில் நீதிவான் த.திருஅருள் சிறைச்சாலைக்குச் சென்று சம்பவம் இடம்பெற்ற இடத்தைப்  பார்வையிட்டதுடன், விசாரணைகளையும் நடத்தியிருந்தார்.

அத்துடன் வவுனியா வைத்தியசாலைக்கும் சென்று சடலத்தைப்  பார்வையிட்டார்.

சட்ட வைத்திய அதிகாரியின் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், மேற்படி நபர் கொல்லப்பட்டரா அல்லது தவறான முடிவெடுத்து மரணித்தாரா என்ற கோணத்தில் தடவியல் பொலிஸாரின் உதவியுடன் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.


வவுனியா சிறைச்சாலையில் கைதி மரணம் - சிறைச்சாலைக்குச் சென்று விசாரணை நடத்திய நீதிபதி வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.நேற்று இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட மேற்படி நபர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் கடந்த 19 ஆம் திகதி முதல் சிறை வைக்கப்பட்டிருந்தார்.எதிர்வரும் 3 ஆம் திகதி வழக்கு விசாரணை இடம்பெற இருந்த நிலையில் மேற்படி நபர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். வவுனியா, செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த 57 வயதான நபரே மரணமடைந்தவராவார்.மரணமடைந்தவரின் சடலம் சிறைக்காவலர்களால் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பதில் நீதிவான் த.திருஅருள் சிறைச்சாலைக்குச் சென்று சம்பவம் இடம்பெற்ற இடத்தைப்  பார்வையிட்டதுடன், விசாரணைகளையும் நடத்தியிருந்தார்.அத்துடன் வவுனியா வைத்தியசாலைக்கும் சென்று சடலத்தைப்  பார்வையிட்டார்.சட்ட வைத்திய அதிகாரியின் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், மேற்படி நபர் கொல்லப்பட்டரா அல்லது தவறான முடிவெடுத்து மரணித்தாரா என்ற கோணத்தில் தடவியல் பொலிஸாரின் உதவியுடன் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Advertisement

Advertisement

Advertisement