• Nov 01 2026

ரணிலின் புது அவதாரம்! - 'ஜென்ஸி', 'மிலேனியம்' குழுக்களுடன் களமிறங்க திட்டம்

Chithra / Nov 1st 2026, 11:33 am
image


ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் இணைவதால் மட்டும் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இளம் தலைமுறையினரைக் கவரும் வகையில் ‘ஜென்ஸி’ மற்றும் ‘மிலேனியம்’ ஆகிய இரு புதிய அமைப்புக் குழுக்களுடன் கட்சி களமிறங்கும் என்று  அறிவித்துள்ளார்.


ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கால மறுசீரமைப்புகள் மற்றும் அரசியல் உத்திகள் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


"ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைந்துவிட்டால் தேர்தலில் இலகுவாக வெற்றிபெற்றுவிடலாம் எனச் சிலர் கணக்குப் போடுகின்றனர். ஆனால், நாட்டில் தற்போதைய அரசியல் கட்டமைப்பு முழுமையாக மாற்றமடைந்துள்ளது என்பதை அவர்கள் உணர வேண்டும்.


பழைய பாணியில் அரசியல் கட்சிகள் ஒன்றிணைவதன் மூலம் மாத்திரம் இனிவரும் காலங்களில் வெற்றி பெற முடியாது. நவீன புத்தாக்கங்களையும் புதிய சிந்தனைகளையும் உள்வாங்கி நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். 


"மிலேனியம் மற்றும் ஜென்ஸி தலைமுறையினர் இன்றைய நவீன அரசியலில் தீர்மானிக்கும் முக்கிய சக்திகளாகத் திகழ்கின்றனர். எனவே, இந்த இளம் தலைமுறையினரைக் கவரும் வகையிலும் அவர்களை அரசியலில் முன்னிலைப்படுத்தும் வகையிலும் எமது கட்சியில் பாரிய மறுசீரமைப்புகளை மேற்கொள்வது அவசியமாகும்.


இதற்கமைய, ‘ஜென்ஸி ஐக்கிய தேசியக் கட்சி’ மற்றும் ‘மிலேனியம் ஐக்கிய தேசியக் கட்சி’ ஆகிய இரு புதிய அமைப்புக் குழுக்களை உருவாக்குவதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும். எமது பாரம்பரிய வாக்காளர்களுக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகின்றதோ, அதே அளவுக்கு இந்த இளம் தலைமுறையினரின் வாக்குகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்." - என்று உறுதியாகத் தெரிவித்தார்.

ரணிலின் புது அவதாரம் - 'ஜென்ஸி', 'மிலேனியம்' குழுக்களுடன் களமிறங்க திட்டம் ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் இணைவதால் மட்டும் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இளம் தலைமுறையினரைக் கவரும் வகையில் ‘ஜென்ஸி’ மற்றும் ‘மிலேனியம்’ ஆகிய இரு புதிய அமைப்புக் குழுக்களுடன் கட்சி களமிறங்கும் என்று  அறிவித்துள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கால மறுசீரமைப்புகள் மற்றும் அரசியல் உத்திகள் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்."ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைந்துவிட்டால் தேர்தலில் இலகுவாக வெற்றிபெற்றுவிடலாம் எனச் சிலர் கணக்குப் போடுகின்றனர். ஆனால், நாட்டில் தற்போதைய அரசியல் கட்டமைப்பு முழுமையாக மாற்றமடைந்துள்ளது என்பதை அவர்கள் உணர வேண்டும்.பழைய பாணியில் அரசியல் கட்சிகள் ஒன்றிணைவதன் மூலம் மாத்திரம் இனிவரும் காலங்களில் வெற்றி பெற முடியாது. நவீன புத்தாக்கங்களையும் புதிய சிந்தனைகளையும் உள்வாங்கி நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். "மிலேனியம் மற்றும் ஜென்ஸி தலைமுறையினர் இன்றைய நவீன அரசியலில் தீர்மானிக்கும் முக்கிய சக்திகளாகத் திகழ்கின்றனர். எனவே, இந்த இளம் தலைமுறையினரைக் கவரும் வகையிலும் அவர்களை அரசியலில் முன்னிலைப்படுத்தும் வகையிலும் எமது கட்சியில் பாரிய மறுசீரமைப்புகளை மேற்கொள்வது அவசியமாகும்.இதற்கமைய, ‘ஜென்ஸி ஐக்கிய தேசியக் கட்சி’ மற்றும் ‘மிலேனியம் ஐக்கிய தேசியக் கட்சி’ ஆகிய இரு புதிய அமைப்புக் குழுக்களை உருவாக்குவதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும். எமது பாரம்பரிய வாக்காளர்களுக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகின்றதோ, அதே அளவுக்கு இந்த இளம் தலைமுறையினரின் வாக்குகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்." - என்று உறுதியாகத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement