• Nov 01 2026

அர்னாப் புயலின் கோரத்தாண்டவம்; 21 ஆயிரத்தைக் கடந்த பாதிப்பு! அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டம் எது?

Chithra / Nov 1st 2026, 12:38 pm
image


இலங்கையில் சீரற்ற காலநிலை மற்றும் அர்னாப் புயலின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி முதல் இன்று (நவம்பர் 1) வரை 19 மாவட்டங்களைச் சேர்ந்த 137 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளன.


இதனால் 5,800 குடும்பங்களைச் சேர்ந்த 21,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


மேலும், இந்த அனர்த்தங்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 8 பேர் காயமடைந்துள்ளனர். 3 பேர் காணாமல் போயுள்ளனர்.


இதற்கிடையில், 8 வீடுகள் முழுமையாகவும், 737 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.


மாவட்ட ரீதியாகப் பார்க்கும்போது, இரத்தினபுரி மாவட்டமே அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளது. அங்கு 2,666 குடும்பங்களைச் சேர்ந்த 10,051 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இரண்டாவது இடத்தில் புத்தளம் மாவட்டம் உள்ளது. அங்கு 1,850 குடும்பங்களைச் சேர்ந்த 6,900 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

 

அர்னாப் புயலின் கோரத்தாண்டவம்; 21 ஆயிரத்தைக் கடந்த பாதிப்பு அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டம் எது இலங்கையில் சீரற்ற காலநிலை மற்றும் அர்னாப் புயலின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி முதல் இன்று (நவம்பர் 1) வரை 19 மாவட்டங்களைச் சேர்ந்த 137 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளன.இதனால் 5,800 குடும்பங்களைச் சேர்ந்த 21,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும், இந்த அனர்த்தங்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 8 பேர் காயமடைந்துள்ளனர். 3 பேர் காணாமல் போயுள்ளனர்.இதற்கிடையில், 8 வீடுகள் முழுமையாகவும், 737 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.மாவட்ட ரீதியாகப் பார்க்கும்போது, இரத்தினபுரி மாவட்டமே அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளது. அங்கு 2,666 குடும்பங்களைச் சேர்ந்த 10,051 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இரண்டாவது இடத்தில் புத்தளம் மாவட்டம் உள்ளது. அங்கு 1,850 குடும்பங்களைச் சேர்ந்த 6,900 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement