மார்ஷல் தீவுகளின் கொடியுடன் பயணித்த சரக்குக் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து ஆபத்தான நிலையில் இருந்த பணியாளர் ஒருவரை இலங்கை கடற்படையினர் அவசரமாக மீட்டுக் கரைக்கு அழைத்து வந்துள்ளனர்.
கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பின் கீழ், இன்று (01) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
“MV SPIRIT OF TOKYO” (IMO 9761231) என்ற சரக்குக் கப்பல் இலங்கைக்கு தெற்கே, இலங்கையின் கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு வலயத்தினூடாகப் பயணித்துக் கொண்டிருந்தபோது, அதில் பணியாற்றிய ஒருவர் எதிர்பாராத விபத்தில் சிக்கி நெற்றிப் பகுதியில் காயமடைந்துள்ளார்.
இதையடுத்து, குறித்த பணியாளர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அவருக்கு அவசர மருத்துவ சிகிச்சை வழங்குவதற்காக கரைக்கு அழைத்து வர உதவுமாறும் கப்பல் தரப்பினர் கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கமைய, கடற்படையினர் கப்பலில் இருந்த பணியாளருக்கு வழங்க வேண்டிய ஆரம்பகட்ட மருத்துவ ஆலோசனைகளைத் தொடர்பாடல் ஊடாக வழங்கியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, இன்று குறித்த கப்பல் காலி துறைமுகத்துக்கு அண்மித்த கடற்பகுதியை வந்தடைந்தபோது, தெற்கு கடற்படை கட்டளையகத்தினால் P 451 படகு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் காயமடைந்த பணியாளர் பாதுகாப்பாகக் கரைக்கு அழைத்து வரப்பட்டு, கப்பலின் உள்ளூர் முகவர் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் மேலதிக சிகிச்சைக்காக காலியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடுக்கடலில் என்ன நடந்தது கடற்படைக்கு வந்த அவசர அழைப்பு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட வெளிநாட்டு கப்பல் பணியாளர் மார்ஷல் தீவுகளின் கொடியுடன் பயணித்த சரக்குக் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து ஆபத்தான நிலையில் இருந்த பணியாளர் ஒருவரை இலங்கை கடற்படையினர் அவசரமாக மீட்டுக் கரைக்கு அழைத்து வந்துள்ளனர்.கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பின் கீழ், இன்று (01) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.“MV SPIRIT OF TOKYO” (IMO 9761231) என்ற சரக்குக் கப்பல் இலங்கைக்கு தெற்கே, இலங்கையின் கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு வலயத்தினூடாகப் பயணித்துக் கொண்டிருந்தபோது, அதில் பணியாற்றிய ஒருவர் எதிர்பாராத விபத்தில் சிக்கி நெற்றிப் பகுதியில் காயமடைந்துள்ளார்.இதையடுத்து, குறித்த பணியாளர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அவருக்கு அவசர மருத்துவ சிகிச்சை வழங்குவதற்காக கரைக்கு அழைத்து வர உதவுமாறும் கப்பல் தரப்பினர் கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதற்கமைய, கடற்படையினர் கப்பலில் இருந்த பணியாளருக்கு வழங்க வேண்டிய ஆரம்பகட்ட மருத்துவ ஆலோசனைகளைத் தொடர்பாடல் ஊடாக வழங்கியுள்ளனர்.அதனைத் தொடர்ந்து, இன்று குறித்த கப்பல் காலி துறைமுகத்துக்கு அண்மித்த கடற்பகுதியை வந்தடைந்தபோது, தெற்கு கடற்படை கட்டளையகத்தினால் P 451 படகு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் காயமடைந்த பணியாளர் பாதுகாப்பாகக் கரைக்கு அழைத்து வரப்பட்டு, கப்பலின் உள்ளூர் முகவர் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் மேலதிக சிகிச்சைக்காக காலியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.