• Nov 01 2026

மாவீரர் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரம்; துயிலுமில்லங்களில் சிரமதானம்! நிதி தொடர்பில் எச்சரிக்கை

Chithra / Nov 1st 2026, 12:32 pm
image


மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான முன்னேற்பாடுகள் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று (01) சிரமதானப் பணிகள் இடம்பெற்றுள்ளன.


குறித்த சிரமதானப் பணியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பணிக்குழுவினர், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


 

இதேவேளை, திருகோணமலை – சம்பூர் ஆலங்குளம் மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் மாவீரர் நாள் நினைவேந்தல் மற்றும் மாவீரர்களின் பெற்றோர்களைக் கௌரவிக்கும் நிகழ்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


இந்நிலையில், குறித்த நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு உதவி செய்ய விரும்புவோர் ஏற்பாட்டுக் குழுவின் உத்தியோகபூர்வ வங்கிக் கணக்கிற்கு நிதியை அனுப்பி உதவுமாறு அதன் தலைவர் காண்டீபன் கோரிக்கை விடுத்துள்ளார்.


அத்துடன், அரசியல் கட்சிகளுக்கோ அல்லது தனிநபர்களுக்கோ பணத்தை அனுப்பி ஏமாற வேண்டாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.


இது தொடர்பில் இன்று வெளியிட்ட காணொளியிலேயே சம்பூர் ஆலங்குளம் மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் காண்டீபன் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

 

மாவீரர் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரம்; துயிலுமில்லங்களில் சிரமதானம் நிதி தொடர்பில் எச்சரிக்கை மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான முன்னேற்பாடுகள் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று (01) சிரமதானப் பணிகள் இடம்பெற்றுள்ளன.குறித்த சிரமதானப் பணியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பணிக்குழுவினர், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். இதேவேளை, திருகோணமலை – சம்பூர் ஆலங்குளம் மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் மாவீரர் நாள் நினைவேந்தல் மற்றும் மாவீரர்களின் பெற்றோர்களைக் கௌரவிக்கும் நிகழ்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், குறித்த நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு உதவி செய்ய விரும்புவோர் ஏற்பாட்டுக் குழுவின் உத்தியோகபூர்வ வங்கிக் கணக்கிற்கு நிதியை அனுப்பி உதவுமாறு அதன் தலைவர் காண்டீபன் கோரிக்கை விடுத்துள்ளார்.அத்துடன், அரசியல் கட்சிகளுக்கோ அல்லது தனிநபர்களுக்கோ பணத்தை அனுப்பி ஏமாற வேண்டாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.இது தொடர்பில் இன்று வெளியிட்ட காணொளியிலேயே சம்பூர் ஆலங்குளம் மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் காண்டீபன் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement